பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/241

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் '227 'மூன்று புரிகளையுடைய ஒன்பது என்னும் எண்ணிக்கை கொண்ட நுண்ணிய நூலே (அணிந்து), உலராத ஆடையை இடையில் கிடந்தவாறே உலரும்படி உடுத்து வழிபடு கிருர்கள். முங் நூல் கொண்டு முப்புரியாக்குதலின், ஒன்ப தாகிய நூலேத் தன்னிடத்தே கொண்ட ஒரு புரி மூன்ருகிய நுண்ணிய பூணுால் என்று உரை வகுப்பார் கச்சினர்க் கினியர். 'ஒன்பது போலவர் மார்பினில் நூலிழை' என்பது அப்பர் திருவாக்கு நூலையும் புலரா உடையையும் உடைய அந்தணரை, 'புன்மயிர்ச் சடைமுடிப் புலரா உடுக்கை முந்நூல் மார்பின் முத்தீச் செல்வத்து இருபிறப் பாளர்' (25: 126-8.) என்று சிலப்பதிகாரத்திலும் காணுகிருேம். தம்முடைய கைகளைத் தனி யின் மேலே கூட்பிக் கொண்டு முருகனைத் துதிக்கிருர்கள் இவ்வந்தணர்கள். பிறகு ஷடகதர மந்திரத்தை ஜபிக்கிருர்கள். அதன்பின் கையில் மலர்களே ஏந்திப் புஷ்பாஞ்சலி செய்கிருர்கள், உச்சிக் கூப்பிய கையினர், தற்புகழ்ந்து ஆறெழுத்து அடக்கிய அருமறைக் கேள்வி காஇயல் மருங்கின் கவிலப் பாடி விரையுறு கறுமலர் ஏக்தி. |தலையின்மேல் குவித்த கையையுடையவர்களாய் முருகனைப் புகழ்ந்து, ஆறு எழுத்துக்களேத் தன்பாற் கொண்ட அரிய உபதேச மந்திரத்தை காக்குப் புரளும் அளவிலே பலமுறை கூறி, மணம் மிக்க நறுமலர்களே எந்தி வழிபடவும்.)