பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/242

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஆறெழுத்து ஆறெழுத்தைத் தன்னுள்ளே அடக்கிய அரிய மந்திரம் ஷடrாம், மறை என்பது மந்திரம் கேள்வி-உபதேசம். உபதேச மந்திரத்தை அவ்வாறு கூறினர். முருகனுக்கு, உரியது ஷடrர மந்திரம். அது பிரணவத்தின் விரிவாக, இருப்பது; அதனல், "ஒரெழுத்தில் ஆறெழுத்தை ஒதுவித்த். பெருமாளே." என்று அருணகிரியார் பாடினர். ஆறெழுத்து இன்னதென்று குறிக்கும்போது கச்சினர்க் கினியர், அது நமோ குமாராய என்பதாம் என்று எழுதி யிருக்கிருர். வடமொழிச் சக்தியிலக்கணப்படி அது கம: குமாராய என்று இருக்கவேண்டும். . மந்திரங்களுக்கு, இலக்கண வரம்பில்லே என்று சொல்வதுண்டு. மகாமகோ பாத்தியாய டாக்டர் யேரவர்கள் பதிட்பில், கமக் குமாராய' என்ற பிரதிபேதமும் காணப்படுகிறது. கச்சினர்க்கினியர் கூறும் உரையில்ை, நமச் சப்தத் துடனும் ஒரு ஷடக்ஷரம் வழங்கியதென்று தெரிய வருகிறது. பஞ்சாக்ஷரம், அஷ்டாக,ரம் முதலிய மந்திரங்கள் நமச்சப்தத் துடன் இணைந்தே உள்ளன. நாம் பெருக வழங்கும் சரவண பவ என்ற ஆறெழுத்தில் நமச்சப்தம் இல்லே. ஒருகால் அந்த மந்திரங்களோடு இனே சேரும் வகையில் இப்படியும் ஒரு. ஷடrரம் இருக்க வேண்டும் என்று தோன்றுகிறது. மந்திரத்தை உச்சரிக்கும் முறை மூன்று உண்டு. அவை, மானஸம், மந்தம், வாசிகம் என்பன. மனத்துக்குள் மந்தி ரத்தை எண்ணி ஐபிப்பது மானஸ்முறை. . - ; துஞ்சலும் துஞ்சல் இலாத போழ்தினும் . நெஞ்சகம் நைந்து நினைமின், நாள்தொறும் v, 3 |