பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/243

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவேரகம் . 229 வஞ்சகம் அற்றடி வாழ்த்த, வந்தகூற்று அஞ்ச உதைத்தன அஞ்செழுத்துமே ’ என்று திருஞானசம்பந்தர் திருவாக்கில் அஞ்செழுத்தை 'நெஞ்சகம் கைந்து நினைக்கும் மானஸ் முறை குறிக்கப் பெறுகிறது. மெல்லப் பிறர் காதில் கேளாதபடி காவைப் புரட்டி உச்சரித்தல் மந்தம். வெளிப்படையாக வாய் விட்டுச் சொல்லுதல் வாசிகம். வாசிகத்தைவிட மந்தம் சிறந்தது. இங்கே முருகனே வழிபடும் அந்தணர்கள் பல துதிகளே வாயாரப் பாடிப் பிறகு ஆறெழுத்தை மந்த முறையில் உச்சரிக்கிருர்கள். 'கா இயல் மருங்கின் விலப் பாடி’ என்றது அதனையே கூறுகின்றது. டுவிலுதல்-பல்கால் உருவேற்றுதல். பாடுதல்-இங்கே, உச்சரித்தல். - ஷடகூடிர மந்திரத்தை உச்சரித்துக் கையில் மலர்களே ஏந்தி வழிபடுகிருர்கள். அபிஷேக ஆராதனைகள் முடிந்த பிறகு கையில் மலரை வைத்துக்கொண்டு வேதமந்திரங்களேச் சொல்லி இறைவன் திருவடியில் சமர்ப்பிப்பது மரபு. இதை மந்திர புஷ்பம் என்று சொல்வார்கள். பூசையின் இறுதியில் கறுமலர் எந்தி வழுத்துதல் வழக்கமாதலின் அதை இங்கே இறுதியில் வைத்துச் சொன்னர். . பெரிதுஉவந்து ஏரகத்து உறைதலும் உரியன்; அதாஅன்று. (இவ்வாறு அங்களுளர்கள் வழிபடுவதை மிகவும் திருவுள்ளத்தில் உவந்து முருகன் திருவேரகத்தில் எழுக் தருளியிரு பதற்கும் உரியவன்; அது மட்டும் அன்று.) இன்னும் இடங்கள் உள்ளன என்று தொடர்கிருர்.