பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/244

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 திருமுருகாற்றுப்படை விளக்கம் ஏரகம் எது? திருவேரகம் என்ற படைவீடு இன்னது என்பதைப் பற்றி முற்காலத்தும் பிற்காலத் தும் சில வேறுபாடான கருத்துக்கள் கிலவி வருகின்றன. திருமுருகாற்றுப்படைக்கு உரை வகுத்த கச்சினர்க்கினியர், "மலே காட்டகத்து ஒரு திருப்பதி என்று எழுதினர். சுப்பிரமணியம் என்று வழங்கும் தலத்தை அவர் எண்ணி அவ்வாறு எழுதியிருக்கக் கூடும் என்று சிலர் கூறுவர். காஞ்சில் காட்டில் உள்ள குமரகோயில் என்ற தலமே ஏரகம் என்று சிலர் எழுதியிருக் கிருர்கள். நாஞ்சில் என்பது ஏரைக் குறிக்கும் சொல் என்றும், காஞ்சில் காட்டில் உள்ளதாதலின் ஏர் அகம் என்ற பெயர் அமைந்ததென்றும், இன்றும் ஈர உடையுடன் வழிபடும் முறை அங்கே உள்ளதென்றும் பிறவாறும் சில: காரணங்களைக் காட்டுகின்றனர். - ஆனல் அருணகிரிநாத சுவாமிகளுடைய கருத்து. காவிரிக்கரையில் சோழநாட்டில் இன்று சுவாமிமலை என்று. வழங்கும் திருத்தலமே திருவேரகம் என்பது, அவருடைய திருப்புகழ்ப் பாக்கள் இதை நன்கு தெளிவுறுத்துகின்றன. " ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசு வாமிமலைப்பதி மெச்சிய சித்த' ஏரக வெற்பெனும் அற்புத மிக்கசு வாமிமலைப்பதி நிற்கும் இலகrண' " தனி ஏரகத்தின்-முருகோனே தருகா விரிக்கு வடபாரிசத்தில் சமர்வேல் எடுத்த-பெருமாளே” ' குளிர்கா மிகுத்த வளர்பூக மெத்து குடகா விரிக்கு வடபாலார் திருவேரகத்தில் உறைவாய்