பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/246

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 திருமுருகாற்றுப்படை விளக்கம் இவ்வூர்ப் பெயர் வருகிறது. (தென்னிந்தியக் கல்வெட்டுகள் தொகுதி 2: கல்வெட்டு, 70) இந்த ஊர் சுவாமி மலேக்கு ஈசானிய திசையில் இருக் கிறது. ஏர் என்னும் தலத்தின் அகத்தே இருப்பதால் ஏரகம் என்ற பெயர் வந்திருக்கலாம். அல்லது அக்காலத்தில் அந்தணர்கள் வாழும் அகரம் மிகப்பெரிதாக இருந்து அதனி டையே முருகன் கோயில் இருந்திருக்கலாம். ஏரைச் சார்ந்த அகரமாதவின் ஏரகரம் என்று வழங்கிப் பிறகு அதுவே ஏரகமாக மாறியிருக்கலாம். ஏர் என்ற வைப்புத் தலமும் எரகமும் அடுத்தடுத்து இருப்பதைய பார்க்கும்போது இத் தகைய எண்ணங்கள் தோன்றுகின்றன, நமக்கு அருணகிரியார் அருள்வாக்கே ஆணையாதலின் சுவாமி மலேயே திருவேரகம் என்று கொண்டு போற்றிப் புகழ்ந்து வழிபடுவோமாக.