பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/247

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை நக்கீரர் திருமுருகாற்றுப்படையில் முதலில் திருப்பரங் குன்றத்தைப்பற்றிச் சொன்னர். அவர் மதுரையில் வாழ்க் தவர். அதன் அருகில் உள்ள திருப்பரங்குன்றத்திலே தொடங்கிக் கீழே திருச்சீரலைவாய்க்கு வந்து மீண்டும் வட மேற்காகச் சென்று திருவாவினன்குடியைக் காட்டி அப்பால் வடகிழக்காக வந்து திருவேரகத்தைப் பாடினர் கடைசியில் மதுரைக்கு அருகில் உள்ள பழமுதிர் சோலையில் வந்து முடிக்கப் போகிருர். முருகன் உள்ள இடங்கள் இவ்வளவுதான? அவன் குறிஞ்சி கிலத்தலைவன். எல்லா மலைகளுக்கும் அவனே உரிமையாளன். பல மலைகளில் அவன் கோயில் கொண்டி ருக்கிருன், பக்தர்கள் வந்து வணங்கும் வண்ணம் அங் கங்கே முருகனுக்கு வழிபாடுகள் நடைபெறுகின்றன. முரு கனுக்குக் கோயில் இல்லாமல் வெறும் மலேயாக இருந்தாலும் அங்கும் முருகனுடைய அருளாட்சி சிலவுகிறது. வேறு மூர்த்திகளின் கோயில்கள் இருந்தாலும் முருகனுடைய உரிமை போகாது. அந்த மூர்த்திகள் அங்கே குடிவந்த வர்கள். திணைக்குச் சொந்தக்காரன் என்ற உரிமையுடைய வன் முருகன்தான். - - கான்கு படை வீடுகளைச் சொல்லிய நக்கீரர் இன்னும் ஒவ்வொரு மலையாக வருணித்துக் கொண்டே போகலாம். அதற்கு முடிவே இராது. கேட்கிற புலவனுக்குப் பொறுமை இருக்க வேண்டும். நூலுக்கும் ஓர் அளவு வேண்டும் அல்லவா? ஆகவே, முருகன் எழுந்தருளியிருக்கும் பிற இடங்களில் பழமுதிர்சோலையை மட்டும் தனியே சொல்வ