பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/248

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

笼34 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் தாகப் பிரித்துக் கொண்டார். மற்ற இடங்களில் மலைகள் எல்லாவற்றையும் ஒரு தொகுதியாகத் தொகுத்து, 'முருகன் ஒவ்வொரு குன்றிலும் தன் அருள் விளேயாடலே நடத்து கிருன்' என்ருர். மற்ற இடங்களைப் பழமுதிர்சோலை மலேயைப் பற்றிக் கூறி முடிப்பதற்குள் வரிசையாகவும் விரைவாகவும் அடுக்கிக் கூறுகிருர், மலைகளையெல்லாம் தொகையாகக்கூறி, "குன்றுதோரு டலும் கின்றதன் பண்பே' என்று முடிக்கிருர், நக்கீரர் காலத்துக்குப் பின் திரு முருகாற்றுப்படையை ஆதாரமாகக் கொண்டு முருகனுக்கு உரிய படை வீடுகள் ஆறு என்று. ஒரு வழக்கு உண்டாயிற்று. ஐந்து படை வீடுகள் தனித் தனியே அமைந்த தலங்கள். ஆனல் கான்காவது படை வீடோ தலங்களின் தொகுதி, எல்லாக் குன்றுகளும் சேர்ந்த தொகுதி அது. குன்றுகளுக்குத் தலைவனகிய முருகன் அவற்றில் தன்னு: டைய வழிபாட்டை கடத்திவரும் பூசாரியாகிய வேலனு. டைய பூசையை ஏற்றுக் கொண்டு அருள் பாலிக்கிருன். குன்றில் வாழும் குறவர்கள் களிகூத்தாடிப்போற்ற, அவர் களுக்கு கலம் செய்தருளுகிருன். இவற்றை நக்கீரர் குன்று. தோருடல் என்னும் பகுதியில் சொல்லுகிருர்; அவற்றை இனிப் பார்ப்போம். வேலன் முருகனுக்குப் பூசைபோடும் பூசாரி தன் கையில் வேலை வைத்துக்கொண்டு ஆவேசம் வந்து ஆடுவான். அதனல் அவனுக்கு வேலன் என்ற பெயர் உண்டாயிற்று. உரையா சிரியர்கள் படிமத்தான் என்று எழுதுவார்கள். படிமம் என்பது பிரதிமை அல்லது விக்கிரகத்தைக் குறிக்கும் சொல். முருகனுடைய திருவுருவத்தைப் பாதுகாத்துப் பூசை