பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/249

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 235. செய்வதால் பூசாரிக்கு அப்பெயர் வந்தது. ஆட்டைப் பலி கொடுத்து அவன் ஆடும் ஆட்டத்தை வெறியாட்டு என்று கூறுவார்கள். குறிஞ்சிகில மக்கள் தங்கள் வீட்டில் யாருக் காவது நோய் வந்தால் வேவனே அழைத்து முருகனுக்குப் பூசை போட்டு வெறியாட்டு எடுக்கச் சொல்வார்கள். அந்தப் பூசாரி வருக்தி அழைத்தால் முருகன் ஆவேச உருவத் தில் வந்து தங்களுக்கு நன்மை செய்வான் என்று குறிஞ்சி' சில மக்கள் நம்பினர். வேலஞகிய பூசாரி முருகனுக்கு மாலே தொடுத்து வைக்கிருன். இக்காலத்தில் சில இடங்களில் கிராம தேவதைகளுக்குப் பூசை செய்யும் பூசாரிக்குப் பண்டாரம் என்று பெயர் வழங்குகிறது, பூத்தொடுக்கும் தொழிலுடை யவர்களுக்கும் அப்பெயர் வழங்கும். இரண்டையும் செய்யும் பண்டாரங்களும் உண்டு. வேலன் மரபில் வந்தவர்கள் இவர்கள். குறிஞ்சி கிலத்து வேலன் அங்கிலத்தில் கிடைக்கும் மலர்களைப் பறித்து மாலையாகத் தொடுக்கிருன். பச்சிலேக் கொடி என்றே ஒரு கொடி உண்டு. அது ஒரே பசுந்தழை யாக மண்டிக் கிடக்கும். அந்தக் கொடியில்ை பூசாரி மாலே கட்டு கிருன். நடுவில் சாதிக்காயை வைத்துக் கட்டுகிருன். அது நல்ல மணத்தை வீசுகிறது. தக்கோலம் என்பது ஒரு மரம். அதன் காய் பண்டங்களைப் பொதிந்து வைக்கும் புட்டிலைப்போல இருக்கும். அதனல் அதனே அம்பொதிப் புட்டில் என்று புலவர்கள் சொல் வார்கள். சாதிக்காயை இடையிட்டுக் கட்டியதைப் போலத் தக்கோலக் காயையும் இடையிடையே வைத்துக் கட்டுகிருன். இது என்ன காய் மாலையா என்று கேட்கத் தோன்றுகிறதல்லவா? பூமாலே தான்,