பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/251

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 237 ° கொடிய தொழிலை உடையவர்கள். வில்லும் அம்புமே அவர்களுடைய படைகள். வில் ஒரே சமயத்தில் பல பொருள்களைத் துளைத்துச் செல்லும்படி அம்பை விடும் தன்மையுடையது. அத்தகைய வில்லை வல்வில் என்று சொல்வது மரபு, பழங்காலத்தில் வல்வில் ஓரி என்ற வீரன் ஒருவன் இருந்தான். அவன் அம்பை ஒரு விலங்கின் மேல் விட்டால் அது அந்த விலங்கை வீழ்த்துவதோடன்றித். தொடர்ந்து பல விலங்குகளின் உடம்பில் ஊடுருவிச்சென்று அவற்றையெல்லாம் மாய்த்து விடுமாம். அதல்ைதான் வல்வில் ஒரி என்ற சிறப்புப் பெயர் வந்ததாம். இராமனேக் கூட வல்வில் இராமன் என்று சொல்வார்கள். கொடுந்தொழிலையும் வல்வில்லையும் கொலேயே புரிகின்ற தன்மையையும் உடைய வேடர்கள் இப்போது முருகனு டைய அன்பு மேலிட்டு அந்தக் கொடிய இயல்பு மாறிக் களிக்கூத்தாடுகிருர்கள். அவர்கள் மார்பில் சக்தனக் குழம்பு மணக்கிறது அந்த மார்பு சந்தன நிறத்தால் பளபளவென்று இருக்கிறது. மலைக் காட்டில் சந்தன மரத்துக்குப் பஞ்சமா? நல்ல இனிய தேனைப் புளிக்கவைத்துக் கள்ளாக மாற்ற அதை மீண்ட மூங்கிற் குழாயில் இட்டு வைத் திருப்பார்கள், காளாக ஆக அது நன்ருகப் புளித்து, உண்டவர்களுக்கு அதிகமான மயக்கத்தை உண்டாக்கும். அத்தகைய கள்ளைக் குறவர்கள் உண்டு மகிழ்ந்து ஆடுகிருர்கள். . மலைகளில் சின்னச் சின்ன ஊர்கள் இருக்கின்றன. அங்குள்ள குறவர்கள் தம் சுற்றத்தாரோடு கள்ளைக்குடித்து மகிழ்கிருர்கள். தொண்டகம் என்னும் பறையை அடித்துக் குரவை யென்னும் கூத்தை ஆடுகிருர்கள். கைகளேக், கோத்துப் பாடி ஆடுவதைக் குரவைக் கூத்து என்பார்கள்.