பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/253

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக்குரவை 239. உடன் வரும் மகளிர் முருகனுடன் அழகிய மகளிர் கூட்டம் ஒன்று வரு கிறது. குறிஞ்சி கிலத்துக்குப் போவதென்ருல் அந்த அணங்குகளுக்கு எல்லையில்லாத மகிழ்ச்சி மயிலேப் போன்ற சாயலும் கடையும் உடைய அவர்கள் தங்களை அலங்கரித்துக்கொண்டு வருகிருர்கள். முருகனேடு பல மயில்கள் வருவதுபோல இருக்கிறது அந்தக் காட்சி. அவர்கள் திருமேனி முழுவதும் மலர்களால் அமைந்த அலங்காரம் ஒளிர்கிறது; தலையிலே பூ, மார்பிலே பூ, இடையிலே பூ. தலையில் கண்ணியாகச் சில மலர்களேச் செருகியிருக் கிருர்கள். நீர்ப் பூக்கள் அழகு செய்கின்றன. வண்டுகள் மொய்க்கும் மணத்தை உடையவை அவை, பேரரும்பாக இருக்கும்போதே பறித்து விரல்களாலே வலிய அலர்த்திக் கட்டித் தலையில் அணிந்திருக்கிருர்கள். ஒரே மாதிரியான .பூக்கள் அல்ல; வெவ்வேறு வகையான மலர்களேக் கண்ணியாகத் தொடுத்து அணிந்திருக்கிரு.ர்கள். கண்ணி கட்டுவதற்கு ஏற்றபடி காம்புகள் இருக்கின்றன, அந்த மலர்களில், - விரல் உளர்ப்பு அவிழ்க்த வேறுபடு கறுங்கால் குண்டுசுனை பூத்த வண்டுபடு கணணி. (விரலாலே வலிய மலர்த்துதலால் மலர்ந்தவை. வெவ்வேறு வகையாக இருப்பவை. வாசகனயும் காம்பும் .இ.இ.L வை, ஆழமான சுனைகளிலே மலர்ந்தவை, வண்டுகள் படிந்து மொய்க்கும் தன்மையவை ஆகிய மலர்களால் தொடுத்த கண்ணியையும்-பிறவற்றையும் உடைய மகளிர் என்று சொல்ல வருகிருi. - உளர்ப்பு-கோதுதல் வலிய மலர்த்துதல். கால்காம்பு. குண்டு-ஆழம்) - -