பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/254

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

240 திருமுருகாற்றுப்படை விளக்கம் பேரரும்புகளே இவ்வாறு விரலால் பிரித்து மாலேயாகக் கட்டி அணிவது வழக்கம்: 'தண்கயத்து அமன்ற ஒண் பூங் குவளை, அரும்பலேத்து இயற்றிய சுரும்பார் கண்ணி. பின்னுப்புறங் தாழக் கொன்னே குட்டி" (180: 5.7) என்று அகநானூற்றில் வருகிறது. கண்ணியை அணிந்தது ஒரு பக்கம். கூந்தல் முழுவதையும் எடுத்துக் கட்டியிருக்கிருர்கள்; இரட்டை யாகப் பிணைத்த மாலையைக் கொண்டு கட்டியிருக்கிருர்கள். இணைத்த கோதை அணைத்த கூந்தல். (இரட்டையாகக் கட்டிய மாலேயினல் கட்டிய கூந்தலையும்-உடைய மகளிர். கோதை -மாலே.) குறிஞ்சி கிலத்துப் பெண்கள் தழை என்று கூறப் படும் ஒரு வகை ஆடையை அணிவார்கள். பலவகை. மலர்களும் தளிர்களும் தழைகளும் இணைத்துக் கட்டியது. அது. தழைகளே மிகுதியாக வைத்துக் கட்டுவதனல் அதற்குத் தழை என்ற பெயர் உண்டாயிற்று. முருகனுடன் வரும் மகளிரும் தழையாடையை இடையில் கட்டியிருக்கிருர்கள் கஞ்சாச் செடியின் பூவும் இலையும் அந்தத். தழையில் இருக்கின்றன. அவற்றை ஒன்ருேடு ஒன்று இணைத்து முடிந்திருக்கிருர்கள். வெண் கடப்பம் பூவையும் சேர்த்துக் கட்டியிருக்கிருர்கள், மலர்களில் வண்டுகள் மொய்க்கின்றன; அவற்றில் உள்ள தாதை உண்ணு. கின்றன. மலரும் தழையும் இணைந்து அமைந்த இந்தத். தழையாடை அவர்கள் இடையைச் சுற்றி உடுத்தும்படி, பெரியதாக இருக்கிறது; குளிர்ச்சியுடையதாகவும் இருக் கிறது. பெருந்தண் மாத்தழை அது. முடித்த குல்லை இலையுடை கறும்பூச் செங்கால் மராஅந்த வால்இணர் இடையிடுபு சுரும்புணத் தொடுத்த பெருந்தண் மாத்த்ழை.