பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/255

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 241. (முடிந்திருக்கும் கஞ்சாவின் இலையையுடைய மண முடைய பூவையும்,சிவந்த அடியை யுடைய வெண் கடம்பின் வெள்ளேயான பூங் கொத்துக்களையும் இடையிடையே இட்டு, வண்டுகள் வந்து மொய்த்துத் தாதுகளே உண்ணும்படி தொடுத்து அமைத்த பெரிய குளிர்ந்த தழையென்னும் ஆடையை-உடுத்துக்கொண்டு வரும் மகளிர் என்று சொல்ல வருகிருர். குல்லே-கஞ்சா. கால்-அடிமரம். மராம்-வெண் கடம்பு. வால்இணர்-வெள்ளேயான பூங்கொத்து. இடை யிடுபு-நடுவில் வைத்து. சுரும்பு-வண்டு. தழைதழை யென்னும் ஆடை ] பல மணிகளைக் கோத்த மேகலையை அழகாகத் தம்முடைய இரகசிய உறுப்பு மறையும்படி உள்ளே அணிக் திருக்கிருர்கள் இவர்கள். அதன் மேலே இந்தத் தழையாடையை உடுத்துக்கொண்டு மயிலேப்போல கடந்து வருகிருர்கள் திருந்துகாழ் அல்குல் திளைப்ப உடீஇ மயில்கண் டன்ன மடங்டை மகளிரொடு. (திருத்தமாக அமைந்த மணிகளாலான வடங்களே யுடைய மேகலையை அணிந்த இரகசிய உறுப்பில் அசையும் படி (தழையை) உடுத்து, மயிலேக் கண்டாற் போன்று வருகின்ற மெத் தென்ற நடையையுடைய பெண்களோடுமுருகன் எழுந்தருளுகிரும்ை. காழ்-வடம்: இங்கே மேகலைக்கு ஆயிற்று. திளைப்பஅசைய, பொருந்த உடீஇ-உடுத்து. மடாடை-மெத் தென்ற கடை.) கண்ணியையும் கூந்தலேயும் தழை யாடையையும் உடைய அழகிய மகளிரோடு முருகன் குறிஞ்சி சில மக்களுக்கு அருள்புரியும் பொருட்டு எழுந்தருளுகிருன். திரு-16