பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/256

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

242 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகன் வருகை அவன் பேரழகன். வெவ்வேறு கோலம் கொண்டு அன்பர்களுக்கு அருள் புரிகிறவன். அவன் திருமேனி வண்ணம் முதலியவற்றையும் அவன் கொள்ளும் கோலங் களையும் சொல்லுகிருர் நக்கீரர். முருகன் செங்கிற முடையவன், "குங்கும ரக்த வர்ணம்" என்று அவனுடைய தியான சுலோகம் சொல்லும், "பவழத் தன்ன மேனி' (குறுந்தொகை) என்று அந்தச் செம்மேனிக்குப் பவளத்தை உவமை கூறுவர் ஒரு புலவர். அவன் உடுத்திருக்கும் ஆடையும் சிவப்பானது. "குன்றி யேய்க்கும் உடுக்கை” (குறுக்தொகை) என்று அதற்குக் குன்றிமணியின் சிவப்பை உவமை கூறுவர். அவனுடைய காதில் அசோகங்களிர் கொங்குகிறது. காதில் அசோகர்தளிரைச் செருகிக் கொள்ளும் வழக்கத்தை முன்பே பார்த்தோம். அதுவும் சிவப்பாகவே இருக்கும். செய்யன், சிவந்த ஆடையன். செவ்வரைச் செயலந் தண்டளிர் துயல்வரும் காதினன். (சிவந்த திருமேனியை உடையவன், செங்கிறம் பெற்ற ஆடையை அணிந்தவன், செம்மையான அடிமரத்தையுடைய அசோகினது குளிர்ச்சியான தளிர் அசையும் காதுகளை உடையவன்-ஆக எழுந்தருளுகிருன், அரை-அடிமரம். செயலே-அசோகு. துயல்வரும்அசையும்.) இடையில் கச்சைக் கட்டிக்கொண்டிருக்கிருன். காலில் வீரக்கழகல அணிந்திருக்கிருன். வெட்சியில்ை ஆகிய சிறிய கண்ணியைத் தலையிலே குடியிருக்கிருன்.