பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/257

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 243 கச்சினன், கழலினன், செச்சைக் கண்ணியன். [கச்சை 4ಣ- வகிை, கழலே அணிந்தவனகி, வெட்சிக் கண்ணியைச் சூடியவளுகி-வருகிருன். செச்சை-வெட்சி) அவன் இசையை விரும்புபவன்;இசையை எழுப்புபவன். பலவகை இன்னிசைக் கருவிகளை அவன் வாசிக்கிருன். கண்ணனைப்போல அவனும் புல்லாங்குழலே வாசிக்கிருன். கொம்பை ஊதுகிருன். இப்படியே பல சிறிய வாத்தியங் களே அவன் வாசிக்கிருன். கீத வாத்திய விநோதகை எழுச் தருளுகிருன். குழலன், கோட்டன், குறும்பல் லியத்தன். (புல்லாங்குழலே வாசிக்கிறவன், கொம்பை ஊது கிறவன். சிறிய பல வாத்தியங்களை வாசிக்கிறவனுய்வருகிருன். கோடு-ஊது கொம்பு, பல்லியம் - பல இசைக் கருவிகள்.) - முருகனுக்குப் பலவகை வாகனங்கள் உண்டு. முன்பு அவன் யானையின் மேல் எழுந்தருளி வந்த காட்சியைக் கண்டோம். இப்போது ஆட்டுக்கிடாய் வாகனத்தில் வரு .கிருன்; மயில் வாகனத்தில் எழுந்தருளுகிருன். நாரதர் இயற்றிய யாகத்திலிருந்து வந்த ஆடு அது. அது உலகையே கிலே கலங்கும்படி செய்தது. முருகன் வீரவாகு தேவரை விடுத்து அதை அடக்கிக் கொண்டு வரும்படி செய்து அதன்மேல் ஊர்ந்தருளுகிருன். முருகனுக்கு இயல்பாகவே மயில் வாகனம் உண்டு. எல்லா மந்திரங்களுக்கும் மூலமாகிய பிரணவமே மயிலாக கின்று முருகனுக்கு வாகனமாயிற்று, இதுவே முதல் மயில் வாகனம். -