பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/259

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை 245 கொண்டு வருகிருர் நக்கீரர். அவனுடன் பல அழகிய மகளிர் வருகிருர்கள். சிலர் இனிய குரலெழுப்பிப் பாடு கிருர்கள். சிலர் கூடி ஆடுகிருர்கள். பாடுகிறவர்களின் குரலின் இனிமையை எப்படி வருணிப்பது ஒரு பெண் பாடியதைச் சீவக சிந்தாமணி ஆசிரியர் கூறுகிருர். "இவள் பாடினளோ, அல்லது வீணை தான் நாவைப் பெற்றுப் பாடியதோ!' என்று யாவரும் உருக அவள் பாடினுளாம். 'இருங்கடற் பவளச் செவ்வாய் திறந்திவள் பாடினளோ நரம்பொடு வீணை நாவின் நவின்றதோ என்று நைந்தார்.’’ அவள் குரலுக்கும் வீணேயின் இசைக்கும் வேறுபாடு தெரி யாமல் அவ்வளவு இனிமையும் கார்வையும் உடையதாக இருந்ததாம், இங்கே முருகனுடன் வருகிறவர்களும் அப்படித் தான் பாடுகிருர்கள். வீணையின் நரம்பிலிருந்து இசை தொகுதியாக எழுந்தால் எப்படி இருக்கும். அவ்வளவு இனிமையாக இருக்கிறது அந்த மகளிரின் இசை. அவர்கள் கூட்டமாக இருந்து பாடுகிருர்கள். முருகனுக்கு இசை யென்ருல் விருப்பம் அதிகம். கரம்புஆர்த் தன்ன இன்குரல் தொழுதியொடு. (யாழின் நரம்பு ஒலித்தாற்போன்ற இனிய குரலே எழுப்பிப் பாடும் மகளிர் கூட்டத்தோடு-முருகன் எழுங் தருளுகிருன். - ஆர்த்தன்ன-ஆர்த்தாலன்ன; ஒலித்தாற் போன்ற தொழுதி-தொகுதி, கூட்டம்.) "இவர்கள் தன்னைச் சேவித் துப் பாடும் மகளிர், என்று இனம் காட்டுவர் கச்சினர்க்கினியர்.