பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை திருமுறையில் பத்துப் பாட்டுள் முதல் பாட்டாக வைக்கப் பெற்ற திருமுருகாற்றுப்படையைச் சிவபக்தர்கள் வேறு ஒரு வகையில் போற்றிப் பாதுகாக்கிருர்கள், இலக்கியப் புலவர்கள் சங்க நூல்களில் ஒன்ருன அதனேத் தொகை நூல்களில் வைத்துப் போற்றி வருவதை முன்பு பார்த் தோம். சைவர்கள் பாராயணத்திற்குரிய நூல்களாகவும், வேதத்தைப் போன்றனவாகவும் போற்றிப் பாதுகாத்து வருவன சைவத் திருமுறைகள். அவை பன்னிரண்டு. அந்தப் பன்னிரண்டில் ஒன்பதாம் திருமுறையாகிய திருவிசைப்பாவும், பதினேராம் திருமுறையும் பல பெரு மக்கள் பாடிய பாடல்களின் தொகுதிகளாகும். பதினேராம் திருமுறையில் இறைவன் பாடிய திருமுகப் பாசுரம் முதல் நம்பியாண்டார் கம்பி பாடிய திருநாவுக்கரசர் திருவேகாதச மாலே வரையில் பலருடைய நூல்கள் அடங்கியிருக்கின்றன. காரைக்கால் அம்மையார் இயற்றிய நூல்களும், பட்டினத் தார் பாடல்களும், வேறு பல பெரியோர்களுடைய பாடல் களும் இத்தொகுதியில் இடம் பெறுகின்றன. இந்தத் திருமுறையில் கோக்கப் பெற்ற நூல்களில் திருமுருகாற்றுப் :படையும் ஒன்று. நக்கீரதேவ நாயனர் இயற்றிய திருமுரு காற்றுப்படை என்ற அடையாளத்தோடு அதனைப் பதினேராம் திருமுறையில் காணலாம். - - இடைக் காலத்தில் சங்க நூல்கள் இருக்கிற இடம் தெரியாமல் மங்கிக் கிடந்தன. தமிழ்நாட்டில் கம்ப