பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/260

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

246 திருமுருகாற்றுப்பட்ை விளக்கம் முருகன் இடையிலே கட்டிய ஆடை நல்ல நிறமும் கயமும் மணமும் உடையதாக இருக்கிறது. சிறிய சிறிய புள்ளிகளே உடையதாய், வாசம் ஊட்டியதாய், மிகவும் மெல்லியதாய் இருக்கும். அது கிலத்திலே கிடந்து புரளு. கிறது. வணக்கமுள்ளவர்கள் ஆடைகளை மடக்கிக் கொண்டு: தலைவர்கள் முன் நிற்பார்கள். தலைவர்களோ தம் ஆடை கிலத்தில் புரளும்படி உடுப்பார்கள். மேல் நாட்டு அரசர் கள். அரசிகள் இவ்வாறு தம் ஆடை கிலத்தில் புரளும்படி உடுத்திருப்பதைப் படங்களில் காணலாம். அவர்கள் கடக்கும்போது ஆடை நுனிகளே எடுத்துச் செல்லச் சில: ஏவலர்கள் அருகில் இருப்பார்கள். 'நிலந்தோய்பு உடுத்த நெடுநுண் ணுடையர்' என்று இத்தகைய பெருமக்களைப் பற்றிய பெருங்கதை என்னும் பழங்காவியம் கூறும். ". . . முருகன் பெருமதிப்புடைய பெரிய தலைவைைகயால் அவன் இடையிலே கட்டிய துகில் கிலத்திலே பொருந்திப் புரளுகிறது. குறும்பொறிக் கொண்ட கறுந்தண் சாயல் மருங்கிற் கட்டிய கிலன்கேர்பு துகிலினன். (சிறிய புள்ளிகளை உடையதாய் மணமும் தண்மையும் மென்மையும் உடையதாய் இடுப்பிலே கட்டிய, கிலத்திலே புரளுதலையுடைய துகிலே உடையவன். பொறி-புள்ளி. சாயல்-மென்மை. மருங்கு-இடைே நேர்பு-பொருந்திப் புரளுதல்.) குறும்பொறி என்பதற்கு உதரபந்தம் என்று பொருள் கொள்வர் கச்சினர்க்கினியர். இடையிலே இறுகக் கட்டிய உதர பந்தத்தின் மேலே உடுப்பதாக