பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/261

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை - 247 உட்கொண்ட, காலவிட்டமையால் கிலத்தைப் பொருந்தி கறிய குளிர்ந்த மென்மையை உடைத்தாகிய துகிலினே யுடுத்து' என்று அவர் பொருள் எழுதுவர். தலைக்கை தருதல் முருகன் அழகும் வீரமும் உடையவன். அவனுடைய புயங்கள் விசாலமானவை; முழவைப்போலப் பருத்தவை. பல மகளிர் கூடி ஆடும்போது அவர்களுக்குத் தோள் கொடுத்து முருகனும் ஆடுகிருன். அவன் தோளும் கையும் வன்மையை உடையவை. மகளிர் தோள்கள் மென்மை யுடையவை. மெல்லியலாராகிய அவர்கள் பெண்மான் களேப்போல இருக்கிருர்கள். அவர்கள் ஒருவர் கையை ஒருவர் கோத்துக் கொண்டு குரவைக்கூத்து ஆடுகிருர்கள். அப்படிப் பல மகளிர் ஆடும்போது ஓர் ஆடவன் அவர் களுக்கு முதல்வகை கின்று அவர்களுடன் கை கோத்து ஆடுவான். அவன் முதலில் கின்று கை தருவதைத் தலைக்கை தருதல் என்று கூறுவார்கள். முருகன் குரவைக் கூத்தாடும் மகளிருக்குத் தலேக்கை தந்து ஆடிக்கொண்டே வருகிருன் ஆடலிலும் பாடலிலும் மகிழும் பெருமான் அவன். முழவுறழ் தடக்கையின் இயல ஏந்தி மென்ருேள் பல்பிணை தழீஇத் தலத்தக்து. (முழவைப்போலப் பெருத்த விசாலமான கைகளால் ஏற்ற வண்ணம் எந்திக் கொண்டு, மெல்லிய தோளேயுடைய மான்போன்ற பல மகளிரைத் தழுவி, அவர்களுக்குத் தலைக்கை கொடுத்து. முழவு-மத்தளம். தடக்கை-விசாலமான கை; குரவைக் கூத்துக்கு ஏற்ப வளைந்த கை என்றும் சொல்ல