பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/263

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குன்றக் குரவை f 249 'குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து அந்நிலைக் கொப்பநின் ருடலாகும்” என்பது மற்ருெரு பழைய குத்திரம். - 'குரவைக் கூத்தே கைகோத் தாடல்" என்பது திவாகரம். கலித்தொகையில் மகளிர் ஆடும் கூத்தில் ஆடவன் தலேக்கை தந்து ஆடும் காட்சியைக் காணலாம். "நிரைதொடி நல்லவர் துணங்கையுள் தலைகொள்ளக் கரையிடைக் கிழிந்தநின் காழகம்.’’ / (கலித்தொகை, 73.) பெருவீரகிைய முருகன் குரவைக்கூத்த்ாடும் மகளி ருக்குத் தலைக்கை தந்து அவர்களுடைய கூத்து நன்கு கடை பெற உதவுகிருன். இவ்வாறு பலவகைக் கோலம் கொண்டு, பல இசைக் கருவிகளை இசைத்து, பாடும் மகளிருடனும் ஆடும் மகளிரு டனும் சேர்ந்து முருகன் மலைகள் எல்லாவற்றிலும் திருவிளே :யாடல் புரிகிருன். r குன்றுதொருடலும் கின்றதன் பண்பே அதாஅன்று. (ஒவ்வொரு மலையிலும் திருவிளையாடல் புரிவதும் சில பெற்ற அவனுடைய இயல்பாகும்; அதுமட்டும் அன்று. வின்ற தன் பண்பே என்று பிரிக்க வேண்டும். தன் என்றது அவனுடைய என்ற பொருளை யுடையது.1 மலேகள் பல; அவை குறிஞ்சித் திணையின்பாற்படும். அவற்றையெல்லாம் தனக்குரியனவாகக் கொண்டு ஆட்சி புரிபவன் முருகன். ஆதலின் அந்தக் குன்றுகளில் அவன் பலபல கோலத்துடன் வருகிருன். பல விளயாடல்களே