பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/264

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

250 திருமுருகாற்றுப்படை விளக்கம் விகழ்த்துகிருன். அதனல் அவனுடைய அழகும். அலங் காரமும், வீரமும், காதலும், இசைவன்மையும், இசை விருப்பமும், ஆடல் வன்மையும், ஆடல் விருப்பமும், அன்பர்களுக்கு அருள் செய்யும் பேரருளும் புலனுகின்றன. பல குன்று - இப்படிப் பல மலேகளிலும் அவன் ஆடும் இயல்பைப் புலப்படுத்திய நக்கீசர் திருவாக்கை அடிப்படையாகக் கொண்டு. எல்லா மலைகளையும் ஒரு தொகுதியாக்கி, குன்று. தோருடல் என்ற தொகுதிப் படைவீடாக அன்பர்கள் போற்றலாயினர். குன்றுதோருடல் என்பதற்கு ஒவ்வொரு குன்றிலும், விளையாடுதல் என்றே பொருள் கொள்ளவேண்டும், ஆடல், என்பது தொழிற்பெயர். அருணகிரிப் பெருமான், "குன்றுதொ ருடல் மேவு பெருமாளே” "குன்றுதோ ருடல் மேவிய பெருமாளே” என்று பாடிய இடங்களிலும் ஆடலே மேவியவன் என்றே. பொருள் கொள்ளும்படி வைத்தார். ஆறுபடை வீடுகளேயும் பாடவந்த கச்சியப்ப சிவாசாரியார், 'குன்றுதோ முடிய குமரற் போற்றுவோம்’ என்று பாடினர். தனியே பெயராகச் சொல்லும்போது இந்தப்படை வீட்டைப் பலகுன்று' என்று சொல்வதே பொருத்தம் என்று. தோன்றுகி றது. அருணகிரிநாத முனிவர், 'பலகுன்றிலும் அமர்ந்த பெருமாளே” 'பலமலை யுடைய பெருமாளே” என்று பாடியிருப்பதும் இங்கே கினேவிற்கொள்ளுவதற். குரியது. .