பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/265

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் உறையும் இடங்கள் திருப்பரங்குன்றம், திருச்சீர&லவாய், திருவாவினன் குடி, திருவேரகம் என்னும் நான்கு படை வீடுகளைப் பற்றிச் சொல்லிப் பிறகு எல்லாக் குன்றுகளையும் ஒரு தொகையாகக் கூறிய நக்கீரர் கடைசிப் படை வீடாகிய பழமுதிர் சோலையைப் பற்றிச் சொல்ல வருகிருர், எக்த நூலுக்கும் ஒரு தொடக்கம். கடு. முடிவு என்று மூன்று பகுதிகள் இருக்கும். ஒரு புலவனுக்கு மற்ருெரு புலவன் வழி காட்டுவதாக அமைந்தது திருமுருகாற்றுப்படை அந்தப்புலவனே விளித்து, 'நீ முருகன் திருவடியை அடையவேண்டும் என்ற ஆர்வத்தோடு புறப்பட்டிருக் கிருயே; நல்ல காரியம் அப்பா. நீ உறுதியாக அவன் திருவருளைப் பெறுவாய்' என்று முன்னே கூறிப் பிறகு அவன் இருக்கும் இடங்களேச் சொல்லத் தொடங்கினர் நக்கீரர். இந்த முன்னுரையையும் முதற்படை வீடாகிய திருப்பரங்குன்றத்தையும் இணைத்துச் சொன்னர் இடையில் மற்றப் படைவீடுகளையும் சொன்னர். இறுதியில் நூலே முடிக்க வேண்டும் அல்லவா?) "கான் சொன்ன இந்தத் தலங்களோடு வேறு பல இடங் களிலும் முருகன் எழுந்தருளியிருக்கிருன், நீ எங்கே உன் அன்பின் திறத்தால் அவனைக் காண முடிகிறதோ அங்கே உள்ளம் உருகி அவனைத் துதிப்பாயாக. உன்னுடைய உண்மை அன்பு கிலேயை அவன் உணர்ந்து உனக்குக் காட்சி தந்து யாரும் பெறுதற்கரிய பரிசாகிய பேரின் பத்தைத் தருவான்' என்று கூறி கிறைவேற்ற வேண்டும். அதை ஆருவது படைவீடாகிய பழமுதிர்"