பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/266

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 திருமுருகாற்றுப்படை விளக்கம் சோலையைப் பற்றிச் சொல்லும் இறுதிப் பகுதியில் அமைக்கிருர். முன்பு இன்ன தலத்தில் இருப்பதற் குரியவன் என்று சொன்னவர், அதே வாய்பாட்டில் பழமுதிர்ச் சோலையைச் சொல்லவில்லை. பழமுதிர் சோலே மலேயில் எழுந்தருளியிருக்கும் முருகன் உனக்குப் பெறலரும் பரிசாகிய இன்பத்தைத் தருவான்' என்ற முறையில் கூறி, நாலே முற்றுவிக்கிரு.ர். இந்த இறுதிப் பகுதியில் முருகன் உறையும் பல்வேறு இடங்களையும், அவனை ஏத்தும் முறையையும், அவன் காட்சி தரும் சிறப்பையும் கூறிவிட்டுப் பழமுதிர்சோலை மலேயின் இயற்கை வளத்தை வருணிக்கிரு.ர். திருவிழா நடைபெறும் இடம் முருகன் தனக்கென்று கோயில் கட்டி வழிபடும் இடங். களில் உறைந்து அன்பர்களுக்கு நன்மை செய்கிருன். அந்த இடங்களில் மட்டுந்தான அவன் இருக்கிருன்? அவன் பார்க்குமிடம் எங்கும் ஒரு நீக்கமற விறைகின்ற பரிபூரண ஆனந்தன். அவன் கண்ணேக் கவரும் அழகுருவம் படைத்தவன். அழகு ததும்பும் இடங்களிலெல்லாம் அழகளுகிய முருகனுடைய மணம் கமழும். மலர்களையும் மற்றப் பண்டங்களையும் வைத்து கடத்தும் விழாக்களில் அவன் சாந்தியத்தியத்தைக் காணலாம். தமிழ் நாட்டில் பொதுவாக விழா என்ருலே தெய்வத் துக்குச் செய்யும் திருவிழாவைத்தான் குறிக்கும். விழாவில் .நறுமணப் பொருள்களும் மலரும் எங்கும் பரவிச் சிதறிக் கிடக்கும், மக்கள் இனிய உணவுகளை உண்டு விருந்து அயர்வார்கள். அழகாக இருக்கும் இடத்தை. இது விழாக் களத்தைப் போல இருக்கிறது என்று கூறுவது