பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/267

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் உறையும் இடங்கள் 253 புலவர்கள் வழக்கம். மகிழ்ச்சியையும் வளப்பத்தையும் தெய்வ உணர்ச்சியையும் கொண்டு விளங்குவது விழா. ஒவ்வோர் ஊரிலும் விழா நடக்கும், அந்தத் தெய்வத் திற்கு ஏற்பத் தனித்தனியே சில முறைகள் உண்டு. சிறிய சிறிய ஊர்களில் முருகனுக்கு விழா எடுக்கிருர்கள். குறிஞ்சி விலக் கடவுளாகிய அவனுக்கு அங்கிலத்தில் விளையும் தினே யரிசியில் விருப்பம் அதிகம். தேனும் தினமாவும் வள்ளி ாாயகி தர உண்டவன் அல்லவா? ஆதலால் அவனே வழி படும்போது தினேயரிசியைக் கொண்டு வழிபடுகிருர்கள். நாம் அட்சதையையும் மலரையும் கலந்து வைத்து வழிபடு கிருேம். மலே நாட்டினர் தினேயரிசியையும் பூவையும் விரவி வைத்துப் பூசிக்கிருர்கள். அந்த நிலத்து வழக்கப்படி ஆடுவெட்டிப் பூசைப் போடுகிருர்கள். விழா ஆரம்பிக்கும் முன்பே கொடியேற்றம் கடக்கிறது. எங்கே விழா நடை பெறுகிறதோ அங்கே முதலில் கோழிக் கொடியை கட்டு விழாவுக்குரிய அமைப்பை உண்டாக்குகிருர்கள். இப்படி ஒவ்வோர் ஊரிலும் நடைபெறுகிறது. அந்த விழாக்களை கடத்துவோருடைய அன்பை உணர்ந்து முருகன் அவ்விடங் களில் எழுந்தருளி நலம் செய்கிருன். அங்கே அவனைக் காணலாம். சிறுதினை மலரொடு விரைஇ, மறி அறுத்து வாரணக் கொடியொடு வயிற்பட கிறீஇ ஊரூர் கொண்ட சீர்கெழு விழவினும். (சிறிய தினேயரிசியைப் பூக்களோடு கலந்து வைத்து, ஆட்டை அறுத்து. கோழிக்கொடியோடு விழாவுக்குரிய களத்தை கிறுவி, ஒவ்வோர் ஊரிலும் கடத்த மேற்கொண்ட சிறப்புப் பொருந்திய விழாக்களிலும்-முருகன் உறைவான் என்று சொல்ல வருகிருர்,