பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/268

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 * திருமுருகாற்றுப்படை விளக்கம் விரைஇ-விரவி, கலந்து. மறி-ஆடு. வாரணக் கொடி-கோழிக்கொடி. வயின்பட இடம் உண்டாக, கிறிஇ-நிறுவி, அமைத்து.1 . தின என்பதற்குப் பிரப்பரிசி என்று உரை கூறுவர் கச்சினர்க்கினியர், இது ஊரார் எல்லாம் சேர்ந்து நடத்துகிற விழா. பல காலமாக ஆண்டுதோறும் வழக்கமாக இந்த விழா கடந்து வருகிறது. மக்கள் திரள் திரளாகக் கூடி விழாவைக் கண்டு களிக்கிருர்கள்; முருகனே வழிபடுகிருர்கள், இவர்கள் பக்தி ஒரளவுதான். - பக்தர்கள் ஏத்தும் இடம் ஆளுல் விழாவை எதிர்பாராமல் எப்போது முருகனே .கினைந்து உருகி வாழ்த்தும் பக்தர்கள் இருக்கிருர்களே, அவர்களுடைய அன்பு உயர்ந்தது. அவர்கள் முருகனுடைய அருளுக்காக எங்கி நிற்பவர்கள். அவன் அருளப்பெற வேண்டும் என்ற பேரார்வம் உடையவர்கள் மற்றப் பொருள் களிடத்தில் விருப்பம் கொள்ளாமல் அவன் அருளொன் றையே பெறும்பொருட்டு ஏசற்று சிற்பவர்கள். அவர்கள் அன்பு சாமானியமான்து அன்று. அது முறுகிய அன்பு ஆர்வம் என்பது அன்பு முறுகிய கிலே. 'அன்பினும் ஆர்வமுடைமை' என்று திருவள்ளுவர் ஆர்வம் அன்பு கனிந்த பிறகு உண்டா வது என்று சொல்கிரு.ர். . "அன்பே தகளியா ஆர்வமே கெய்யாக" என்பது ஆழ் வார் திருவாக்கு. அன்பு பொதுவானது. ஆர்வம் சிறப் பானது. அன்பு இலேயானல் ஆர்வம் மலராகும். அன்பு மலரானல் ஆர்வம் காயாகும். அன்பு காயானல் ஆர்வம் கனியாகும், விழாவில் இறைவனைத் தரிசிக்கும் அன்பர்கள்