பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/269

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மூருகன் உறையும் இடங்கள் - 255 பலர் கூடுகிருர்கள். ஆனல் ஆர்வமுடையவர்கள் எல்லாக் காலத்திலும் அவனே கினைந்து உருகி அவன் அருளப்பெறு வதே குறிக்கோளாக சிற்பார்கள். அன்புடையவரை அன்பர் என்றும், ஆர்வம் உடையவர்களே ஆர்வலர் என்றும் சொல்வர். அன்பர்கள் பக்தர்கள்: ஆர்வலரோ முறுகிய பக்தர்கள். திருச்சீரலைவாயைச் சொல்லும் பகுதியில் முருக னுடைய ஆறு திருமுகங்களைச் சிறப்பிக்கும் இடத்தில், அவனுடைய முகம் ஒன்று ஆர்வலர்களுக்கு வரம் கொடுப் பது என்று முன்பே. சொன்னர். ஆர்வலர் ஏத்த அமர்ந்தினிது ஒழுகிக் காதலின் உவந்து வரங்கொடுத் தன்றே.” அங்கே ஆர்வலர் என்ற சொல்லேக் கண்டோம். மறு படியும் இப்போது ஆர்வலர்களே நினைக்கிருர் நக்கீரர். முறுகிய பக்தர்களாகிய ஆர்வலர்கள் எங்கெங்கே எவ்வெப் போது துதித்து வழிபடுகிருர்களோ, அந்த அந்த இடங் களில் முருகன் சென்று அருள்தர முந்துவான். "செங்கேழ் அடுத்த சினவடிவேலும் திருமுகமும் பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க் கொங்கே தரளம் சொரியும்செங் கோடைக் குமரனென எங்கே நினைக்கினும் அங்கேவந் தென்முன் எதிர்நிற்பனே' என்று அருணகிரியார் கந்தர் அலங்காரத் தில் பாடுகிருர், விழா எடுக்கும் களங்களில் பொதுவான கிலேயில் எழுந்தருளும் முருகன், தன் அருளன்றி வேறு நோக்கமின்றி எங்கும் ஆர்வலர்கள் வழிபடும் இடங்களிலும் இருப்பான்.