பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருமுருகாற்றுப்படை - 13: ராமாயணம், நைடதம், மகாபாரதம் முதலியவற்றையே படித்தவர்கள் மிகுதியாக இருந்தார்கள். சங்க நூல்கள் இன்னவை என்பது சில காலத்திற்குப் புலவர்களுக்கே தெரியாமல் இருந்தது. மகாமகோபாத்தியாய டாக்டர் ஐயரவர்கள் தோன்றிப் பழந்தமிழ் நூல்களைக் கண்டெடுத்து ஆராய்ந்து விளக்கம் எழுதி நல்ல முறையில் பதிப்பித்து வெளியிட்டார்கள். அதன் பிறகே சங்க நூல்களின் ஒளி எங்கும் பரவலாயிற்ற, இன்று பள்ளிக்கூடத்து மாணவர்கள் முதல் புலவர்கள் ஈருக எல்லாரும் சங்க நூல்களைப் பற்றிப் பேசிப் பெருமை அடைகின்றனர், ஐயரவர்கள் காலத்திற்கு முன் பல ஆண்டுகள் சங்க நூல்கள் தமிழ்நாட்டில் உலவாமல் மங்கி யிருந்தன. பிற சங்க நூல்கள் மங்கியிருந்தாலும் திருமுரு. காற்றுப்படை மாத்திரம் ஏனேயவற்ருேடு மறைந்து போகாமல் தமிழ் நாட்டினரால் பாராயணம் செய்வதற். குரியதாக இருந்து வந்தது. இதற்குக் காரணம், அதனைப் பதினேராம் திருமுறையில் ஒரு நூலாக வைத்துக் கோத்ததுதான். பத்துப் பாட்டிலும், பதினேராங் திருமுறையிலும் பெருமை பெற்று இலங்கும் திருமுருகாற்றுப்படையை இலக்கிய நூல்களில் சிறந்த இலக்கியமாகவும், முருகன் பெருமையை உரைக்கும் நூல்களில் பழம்பெருமை வாய்ந்த நூலாகவும் கருதிப் புலவர்களும், பக்தர்களும் இன்றும் போற்றி வருகிருர்கள். இலக்கணம் சங்கத் தொகை நூலாகிய பத்துப் பாட்டில் ஐந்து: பாடல்கள் ஆற்றுப்படை என்பதை முன்பே சொன்னேன். ஆற்றுப்படை என்பது பழங்காலத்தில் புலவர்கள் அரசர் களையும் வள்ளல்களையும் பாராட்டுவதற்காக அமைத்துக்