பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/270

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

256 திருமுருகாற்றுப்படை விளக்கம். ஆர்வலர் ஏத்த மேவரு நிலையினும். (அன்பு முறுகி ஆர்வமாகிய ஆர்வலர்கள் துதித்து வழி' பட விரும்பிச் செல்லும் இடங்களிலும்.) - வெறி அயர் களன் முருகனைப் பூசிப்பதே தொழிலாக உடையவன் வேலன். அவன் தன் கையில் வேலே வைத்துக்கொண்டு ஆடுவதல்ை. வேலன் என்று பெயர் பெற்ருன். அந்தப் பூசாரி கோயிலில் பூசை செய்வான். யாருக்கேனும் தீங்கு வங்கதால்ை அதை மாற்றுவதற்கு அவர்கள் வீட்டுக்கே சென்று பூசை போடு வான். அவன் ஆட்டுக்கிடாயை வெட்டிச் செய்யும் பூசைக்கு வெறியாட்டு என்று பெயர். அவன் எங்கே பூசை போட். டாலும் அங்கேயும் முருகன் எழுந்தருளுவான். வேலன் தைஇய வெறிஅயர் களனும். (பூசாரி அமைத்த வெறியாடுகின்ற இடத்திலும். தைஇய-அலங்கரித்து அமைத்த. வெறி-ஆட்டை அறுத்துச் செய்யும் பூசை. களம்-இடம்.) 'வேலன் புனைந்த வெறியயர் களம்” (குறுந்தொகை, 53), 'வேலன் வெறியயர் வியன்களம்' (அகநானூறு,98), 'வேலனர் வந்து வெறியாடும்.வெங்களத்து'(சிலப்பதிகாரம்). என்று பழைய நூல்கள் இந்த வெறியயர் களத்தைப் பற்றிக் கூறுகின்றன. பிள்ளே யார் வேலேத் தனக்கு அடையாளமாகக் கொண்டு திரிதலின் வேலன் என்ருர்’ என்று ஈச்சினர்க் கினியர் விளக்குவார். - பலமக்கள் கூடி விழா எடுக்கும் இடம். அன்பிற். சிறந்தவர்கள் தனியே இருந்து வழிபடும் இடம்,

  • பிள்ளையார்-முருகன் - - -