பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/271

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் உறையும் இடங்கள் 257 பூசையையே தொழிலாகக்கொண்ட பூசாரி பூசை போடும் இடம் என்ற மூன்றும் முருகனே கினைப்பூட்டுவதற்குரிய செயற்கை வடிவங்களேயோ, படிமங்களையோ உடையவை, இவற்றைச் சொல்லிவிட்டு, அழகுள்ள இயற்கையான இடங்களிலும், மக்கள் செயற்கையாக அமைத்த அழகிய இடங்களிலும் முருகன் எழுந்தருளியிருக்கிருன் என்று சொல்ல வருகிருர் நக்கீரர். இயற்கையிலும் செயற்கையிலும் இயற்கை யெழில் கிரம்பியது காடு; அடர்ந்த மரச் செறிவும், மலரும் காயும் கனியும் குலுங்கும் வளமும் உடையது. அது மழையின் உதவியால் இயற்கையாக வளர்வது மலேக் காடானலும், முல்லே விலத்துக் காடானலும் முருகன் அங்கே எழுந்தருளியிருப்பான். மக்கள் தங்கள் ஊரைச் சார வளர்ப்பது சோலேதாங்கள் விரும்பிய மரங்களே கட்டு வளர்த்து, வேண்டும் போது அங்கே சென்று இகளப்பாறுவார்கள். ஊர்கள் தோறும் சோலைகள் இருப்பதும், அங்கே சென்று தங்கி மாதரும் ஆடவரும் இன்புறுவதும் சிறந்த நாகரிக வாழ் வுக்கு அடையாளங்கள். பொழிலாட்டு என்பது சிறந்த சமுதாயத்துக்குரிய விளையாட்டு. காவியங்களில், மக்கள் சோலையில் சென்று மனம் போனபடி மகிழ்ச்சியுடன் விளையாடுவதைப் புலவர்கள் வருணிப்பார்கள். கம்பரும் பொழிலாட்டுப் படலத்தை அமைத்திருக்கிருர் காப்பியங் களுக்குரிய இலக்கணங்களில் ஒன்று அது. ஆகவே, வளவாழ்வு பெற்றவர்கள் மகிழ்ந்து தங்குவதற்காகத் தாமே விரும்பி அழகுபெற அமைப்பது சோக்ல; அதைக் கா என்று சொல்வர். திரு-17