பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/272

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 திருமுருகாற்றுப்படை விளக்கம் இயற்கையில் அமைந்த காட்டிலும், மக்கள் விரும்பிச் செயற்கையாக அமைத்துக்கொண்ட காவிலும் முருகன் எழுந்தருளியிருப்பான். ஆற்றின் நடுவிலே சில திட்டுகள் கிரந்தரமாக அமைக் திருக்கும் அவை மிகவும் வளப்பமாக இருக்கும். கடலுக்கு நடுவிலே இருப்பதைத் தீவென்றும் ஆற்றுக்கு நடுவிலே இருப்பதைத் துருத்தி என்றும் கூறுவது மரபு. இன்றும் மலையாளத்தில் கழிகளுக்கு ஈடுவே உள்ள இடங்களைத் துருத்தி என்று சொல்கிருர்கள். துருத்தியும் மரங்கள் அடர்ந்து வளம் பெற்று நிலவும். அங்கும் முருகன் எழுந்தருளியிருப்பான். காடு, சோலே, ஆற்றிடைக் குறையாகிய துருத்தி எனற மூன்றும் அழகு தவழும் இடங்கள். அங்கே முருகன் எழுந்தருளியிருக்கிருன், காடும் காவும் கவின்பெறு துருத்தியும். (இயற்கையாக வளர்ந்த காடுகளிலும், மக்கள் வளர்க்கும் சோலைகளிலும், அழகுபெற்ற ஆற்றுக்கு நடுவில் உள்ள இடங்களிலும்.) . - இன்னும் முருகன் எங்கே இருக்கிருன்? மரங்கள் அடர்ந்த இடங்களைச் சொன்னர். அவை வளர்வது புனலாலே அல்லவா? காடும் காவும் திருத்தியும் நீர் வளத்தால் அழகு பெறுகின்றன. அந்த நீரையுடைய நீர் விலைகளிலும் இயற்கையானவை பும் செயற்கை யானவையும் உண்டு. ஆறுகள் இயற்கையாக அமைக் தவை. குளங்கள் மக்கள் வேண்டும் இடங்களில் வெட்டிக் கொண்டவை. இயற்கையானலும் செயற்கை யாலுைம் அவ்விடங்களில் வெம்மையைப் போக்கித் தண்மை தந்து தாகம் தீர்த்தப் பயிரை வளர்க்கும் ர்ே