பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/273

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் உறையும் இடங்கள் 259 நிரம்பி இருக்கிறது. அங்கே அருள் தண்மை நிரம்பிய முருகன் மறைந்து உறைகிருன். இயற்கையும் செயற்கையுமாக அழகு மலிந்து விளங்கும் இடங்கள் எத்தனை எத்தனையோ உண்டு அவற்றை எல்லாம் தனித்தனியே சொல்லிக்கொண்டு செல்ல நேரம் இல்லை. இப்போது சொன்னவற்றைப் போன்ற வேறு பல இடங்களிலும் முருகன் தெய்விகம் தோற்ற இருந்து விளங் குகிருன். யாறும் குளனும் வேறுபல் வைப்பும் [இயற்கையான ஆற்றிலும். மக்கள் வெட்டிய குளத் திலும், இவை போன்ற வேறு பல இடங்களிலும்.) இனி மக்கள் செறிந்து வாழும் இடங்களுக்கு வரு வோம். பெரிய ஊர்களில் பல தெருக்கள் இருக்கின்றன. அவை கூடுகின்ற இடங்கள் உண்டு. அவற்றைச் சந்தி என்று சொல்வது வழக்கம். தெருக்கள் சந்திக்கின்ற இடம் ஆதலின் சக்தி யென்ற பெயர் வந்தது. மூன்று தெருக்கள் கூடும் இடம் முச்சந்தி. நான்கு தெருக்கள் கூடும் இடம் காற்சந்தி; அதைச் சதுக்கம் என்ற தனியே பெயரிட்டு அழைப்பர், சதுஷ்கம் என்ற வட சொல்லே அப்படியா யிற்று. ஐந்து தெருக்கள் கூடும் இடம் ஐஞ்சந்தி. பெரிய ககரங்களில இவ்வாறு பல தெருக்கள் கூடும் இடங்கள் உண்டு, சில சந்திகளில் தெய்வங்களே நிறுவி யிருப்பதும் உண்டு. காவிரிப்பூம்பட்டினத்தில் நான்கு தெருக்கள் கூடும் ஓரிடத்தில் ஒரு பூதத்தை கிறுவி யிருந்தார்கள். அதற்குச் சதுக்கப் பூதம் என்று பெயர். சீகாளத் தியில் ஐஞ்சக்தி விசாயகர் என்று ஒரு மூர்த்தி இருக்கிருர். ஐந்து தெருக்கள் கூடிய இடத்தில் இருந்தவராதலின் அந்தப் பெயரைப் பெற்றிருக்க வேண்டும்.