பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/274

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

260 திருமுருகாற்றுப்படை விளக்கம் இப்பொழுதெல்லாம் நகரங்களில் இத்தகைய சந்தி களில் விற்பவர்கள் போலீஸ்காரர்கள். வண்டிகளின் போக்குவரத்தை ஒழுங்குபடுத்துவதற்காக அவர்கள் கிற்கி ருர்கள். இந்த எல்லாச் சந்திகளிலும் முருகனுடைய அருளோட் டம் இருக்கிறது. அவன் அவ்விடத்தில் இருக்கிருன். அவனும் பெரிய காவற்காரன்தானே? முருகன் கடப்ப மலர்மாலேயை அணிபவன்; ஆதலின் கடம்பன் என்ற திருநாமம் அவனுக்கு அமைந்தது. புதிய பூவை உடைய கடம்ப மரமே முருகனுக்கு உகந்த இடங் தான். அதில் அவன் எழுந்தருளியிருப்பான். சதுக்கமும் சக்தியும் புதுப்பூங் கடம்பும். (நான்கு தெருக்கள் கூடும் சதுக்கத்திலும், மூன்று: தெருக்கள் ஐந்து தெருக்கள் முதலியவை கூடும் சந்தியிலும், புதிய பூவை யுடைய கடம்ப மரத்திலும்.) - முருகன் கடம்ப மரத்தில் உறைபவன் என்பதை வேறு நூல்களும் சொல்கின்றன. 'கடம்பமர் நெடுவேள்' என்பது பெரும்பாளுற்றுப்படை. "கடம்பமர்ந்து’’ "கடம்பமர் அணிநிலை' என்பன பரிபாடலில் வரும் பகுதிகள். செல்வக் கடம்பமர்ந்தான்' என்று ஐக்தினை ஐம்பதும், 'கடம்பமர் மன்றற் ருெங்கற் கந்தன்' என்று பழைய திருவிளையாடற் புராணமும், "கடம்பமர் காளை' என்று தேவாரமும் கந்த புராணமும் கூறுகின்றன.