பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/275

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகன் உறையும் இடங்கள் 261 கடந்து செல்லும் மக்கள் கூடும் சந்திகளைச் சொன்ன வர், மக்கள் கூடும் வேறு இடங்களையும் சொல்ல வருகிருர், சிறிய ஊர்களில் ஊருக்கு நடுவே ஒரு மரமும் அதைச் சுற்றி மேடையும் இருக்கும். அங்கே ஊர்க்காரர்கள் கூடி நியாயம் பேசுவார்கள். உண்மையையே பேசுவார்கள்: பொய் பேச அஞ்சுவார்கள். அந்த இடம் தெய்வத் தன்மை உடையது என்று அஞ்சியே பொய் பேசமாட்டார்கள். அத் தகைய இடத்துக்கு மன்றம் என்று பெயர். மக்கள் கூடும் அந்த இடமும் முருகனுடைய ஆட்சி சிறப்பாக கிலவும் இடம். அது போலவே நகரங்களில் பலரும் கூடும் இல்லங்கள் உண்டு. அவற்றை அம்பலம் என்றும் பொதியில் என்றும் சொல்வார்கள், எல்லோரும் பொதுவாகக் கூடிப்பேசும் இல்லாதலின் பொதியில் என்ற பெயர் வந்தது; பொது இல் என்ற இரண்டு சொற்கள் இணைந்த வடிவமே பொதியில் என்பது. அங்கும் முருகன் திருவருள் மணக்கும். பழங்காலத்தில் சிறு கம்பங்களையும், முளேகளையும் கட்டு அவற்றையே தெய்வமாக வழிபட்டு வந்தார்கள். அவற்றைக் கந்து அல்லது கந்தம் என்று சொல்வார்கள். கந்து என்பதற்கு நடுதறி யென்றும் பற்றுக் கோடென்றும் பொருள். சிவலிங்கம் எப்படி அருவம், உருவம் என்ற இரண்டையும் இணைத்த அருவுருவமோ அது போன்றதே அந்தக் கந்து. கன்ருட்பூர் என்ற திருத்தலத்தில் இறைவன் கடுதறியாகவே காட்சியளிக்கிருன், 'கன்ருப்பூர் நடுதறியைக் காண லாமே” என்பது தேவாரம் இவ்வாறு கங்தை கட்டு வழிபடும் இடம் கந்துடை கிலே. அங்கேயும் கந்தன் எழுந்தருளியிருப்பான்.