பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/276

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

262 திருமுருகாற்றுப்படை விளக்கம் மன்றமும் பொதியிலும் கந்துடை நிலையினும். (மரத்தடியிலுள்ள மன்றத் திலும், பொதுவாகப் பலர் கூடும் சபையிலும. கங்தை வழிபடும் இடத்திலும்.) கந்து என்பதற்கு ஆதீண்டு குற்றி என்று கச்சினர்க் கினியர் பொருள் உரைத்தார். இவ்வாறு முருகன் இயற்கை யெழில் தவழும் இடங்: களிலும் செயற்கை யழகுடைய இடங்களிலும், மக்கள் கடக்கும் இடங்களிலும், ஒன்று கூடித் தங்கும் இடங் களிலும், சந்து கட்டு வழிபடும் இடங்களிலும் எழுந்தருளி யிருககிருன். அழகு. ஒற்றுமை, இயக்கம், நியாயம். வழிபாடு, மணம் ஆகியவை உள்ள இடங்களிலெல்லாம் முருகன் இருந்து அவற்றை இலங்கச் செய்கிருன். முன்னே கூறிய இடங்களில் சிலவற்றைப் பிற நூல் களும் சொல்கின்றன. 'ஆலமும் கடம்பும் நல்யாற்று நடுவும் கால்வழக் கறுநிலைக் குன்றமும் பிறவும் அவ்வவை மேய வேறுவேறு பெயரோடு எவ்வயி னேயும் நீயே’’ என்று பரிபாடல் பாராட்டுகிறது. 'துறையும் ஆலமும் தொல்வலி மராஅமும் முறையுளிப் பராஅய்ப் பாய்ந்தனர்' என்பது கலித்தொகை. மேலே சொன்ன இடங்களில் முருகன் எழுந்தருளி யிருப்பதாகக் கருதி அன்பர்கள் வழிபடுவது உண்டு. இவற்றைக் கூறிவிட்டு மேலே குறமகள் செய்யும். வழிபாட்டை விரிவாகச் சொல்லப் புகுகிருர் சக்கீரர்.