பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/277

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை முருகனுக்கு மிகவும் விருப்பமான இடம் குறிஞ்சி நிலம். மலேகளிலும் அவற்றைச் சார்ந்த இடங்களிலும் அவனை வழிபடுபவர்கள் மிகுதி. குறிஞ்சி iலத்த ஊர்களில் உள்ள பூசாரியாகிய வேலன் அவனே வழிபடுவதை நக்கீரர் முன்பு சொன்னர். இப்போது பூசாரிச்சியாகிய குறமகள் பூசை போடுவதை வருணிக்க வருகிரு.ர். பூசாரிச்சியைத் தேவராட்டி என்றும் சொல்வதுண்டு. தெய்வம் ஆவேச உருவத்தில் அவள்மேல் வந்து அருள் செய்யுமாம். அதனல் அந்தப் பெயர் உண்டாயிற்று. அவள் மிகவும் பக்தியுடனும் விரத ஒழுக்கத்துடனும் இருந்து முருகனே வழிபட்டுப் பிரத்தியட்சமாக அவனே வருவிக்கிருள்; தன்மேல் ஆவேசிக்கும்படி செய்கிருள் அவள் செய்யும் வழிபாட்டையும் வெறியாட்டு என்று சொல்வார்கள். கொடியேற்றம் இதோ, குறமகள் முருகனே வரும்படி செய்யப் போகிருள். அதைக் கண்டு தம் தம் குறைகளைத் தீர்த்துக் கொள்வதற்காகக் குறிஞ்சி சில மக்கள் அத்தனை பேரும் கூட்டமாகக் கூடியிருக்கிருர்கள். முருகனுக்குப் பெரிய திருவிழாவே நடைபெறுகிறது r * திருவிழாவில் முதலில் செய்யவேண்டுவது கொடி யேற்றம். இங்கும் முதலில் கொடியேற்றம் கடைபெறு கிறது. முருகனுடைய கொடி கோழி. சேவலுக்குக் கொண்டை அழகாக இருக்கும். கொண்டை அசைய