பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/278

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

264 திருமுருகாற்றுப்படை விளக்கம் அசையச் சேவற்கோழி கடந்து வருவதே ஒரு சிறப்பாக இருக்கும். கொண்டையில்ை மாட்சி பெற்ற தலையை யுடையது சேவல் அந்தக் கொடியை இப்போது ஏற்று கிருர்கள். வெறும் கொடியை மட்டும் ஏற்றில்ை போதுமா? திருவிழாவுக்கு ஏற்ற வகையில் அலங்காரம் செய்கிருர்கள். தோரணம், பூமாலே எல்லாவற்றையும் கட்டுகிருர்கள். முருகன் திருக்கோயிலுக்கு முன் வெறுவெளி யாக இருந்த இடம் இப்போது விழாக் கோலத்துடன் பொலிகிறது. விழாவுக்குப் பொருத்தமானபடி எல்லா வற்றையும் செய்திருக்கிரு.ர்கள். மாண்தலைக் கொடியொடு மண்ணி அமைவர. (மாட்சிமைப்பட்ட தலையையுடைய கோழிக் கொடி யோடு மற்ற அலங்காரங்களையும் செய்து பொருத்தமாக அமையும்படி. - மண்ணி- அலங்கரித்து, "ஆண்டலேக் கொடி' என்று. பிரித்து, பேய் முதலியவை வராமல் பாதுகாப்ப்ாக இருக் குப்படி ஆடவனது தலேயும் பறவையின் உடம்பும் உடைய உருவத்தை எழுதிய கொடி என்றும் பொருள் கொள்வது உண்டு. ஆண்டலேக் கொடி என்பதற்கு மயிற் கொடி என்று ஓர் உரையாசிரியர் உரை எழுதியிருக்கிரு.ர்.) ஆராதனை தெய்வங்களுக்கு உகந்தது வெள்ளைக்கடுகு. கடவுளே வழிபடும் இடங்களில் அதை அரைத்துப் பூசுவது வழக்க மென்று பழைய நூல்கள் சொல்லுகின்றன. வெள்ளைக் கடுகை அரைத்து கெய்யோடு குழப்பி அங்கங்கே பூசுவார் களாம். தெய்வம் இருப்பதாக எண்ணும் வாசல் கிலே முதலிய இடங்களில் அதை அப்புவார்கள். இப்போது மஞ்சளும் குங்குமமும் இடும் வழக்கம் இருப்பது போன்றது அது.