பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/28

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 திருமுருகாற்றுப்படை விளக்கம் - கொண்ட நூல் வடிவம். தமிழ் நாட்டில் பல வகையான ஆற்றுப்படைகள் இருந்தன என்பதை அதன் இலக்கணத் தால் தெரிந்துகொள்ளலாம். தொல்காப்பியம் என்னும் பழைய இலக்கணத்தில் ஆற்றுப் படையின் இலக்கணம் தனியே அமைந்திருக்கிறது. அதைப்பற்றி வேறு இடங் களிலும் சில செய்திகளேத் தொல்காப்பியர் கூறுகிருர், இலக்கியம் கண்டதற்கு இலக்கணம் இயம்புதல் மர பாதலின், ஆற்றுப்படைகள் பலவற்றைக் கண்டு அவற்றின் இலக்கணத்தைத் தொல்காப்பியர் வகுத்தார் என்று கொள்ளவேண்டும். பிற்காலத்தில் தோன்றிய வேறு பல நூல் வகைகளுக்கு இலக்கணம் தொல்காப்பியத்தில் காண வில்லை. ஆற்றுப் படையின் இலக்கணம் கன்கு அமைந்த தைக் கொண்டு, பழங்காலத்தில் ஆற்றுப்படை பெருக வழங்கியிருக்க வேண்டுமென்று தெரிந்து கொள்ளலாம். கவிஞர்கள் ஏதேனும் ஒன்றைச் சொல்ல வேண்டு மால்ை ஏனையவர்கள் சொல்கிற மாதிரி சொல்ல மாட் டார்கள். அப்படிச் சொன்னல் அது சுவையற்றுச் சப் பென்று இருக்கும். "காசிக்குப் போனன், காவடி கொண்டு வந்தான்' என்று சும்மா சொன்னல் அதில் நயம் இல்லை. அதனைப் பல படியாக வருணித்துப் பல நிகழ்ச்சிகளை எடுத்துச் சொன்னல் சொல்கின்ற முறையில் இன்பம் உண்டாகும். ஆற்றுப்படை என்பது சுவை பயக்கும்படி ஒருவருடைய புகழ் நலத்தைச் சொல்லும் வகை. அதன் இலக்கணம் பின்வருமாறு: 'கூத்தரும் பாணரும் பொருநரும் விறலியும் ஆற்றிடைக் காட்சி உறழத் தோன்றிப் பெற்ற பெருவளம் பெரு.அர்க்கு அறிவுறீஇச் சென்று பயன்எதிரச் சொன்ன பக்கமும்.' -தொல்காப்பியம்