பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/280

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

266 திருமுருகாற்றுப்படை விளக்கம் (நெய் அல்லது எண்ணெயோடு வெண்சிறு கடுகை யும் அப்பி, மெல்லியதாக மந்திரத்தைச் சொல்லிக் கை கூப்பி வணங்கி வளப்பமிக்க மலர்களைத் தூவி அருச்சித்து. கெய் என்பது எண்ணெய்க்கும் பெயர். ஐயவி-வெண் சிறு கடுகு ஐது மெல்லிதாக, குடந்தம்படுதல்-கும்பிடுதல்.) ஐத உரைத்து என்பதற்கு 'தான் வழிபடுவதற் குரிய மந்திரத்தைத் தோன்ருமல் உச்சரித்து' என்று உரை எழுதுவர் கச்சிஞர்க்கினியர். சிறிது மந்திரங்களையும் ஓதி' என்பது வேறு ஒர் உரை. மந்திரங்களை வெளிப்படை யாகச் சொல்லுதல் கூடாது. - குடந்தம்படுதல்-கையைக் குவித்து வணங்குதல்; அஞ்சலி செய்தல். "கால்விரல் முடக்கிப் பெருவிரல் நிறுத்தி, கெஞ்சிடை வைப்பது குடந்த மாகும்” என்பது ஒரு பழைய சூத்திரம். குட என்பது ஒளேவை உணர்த்தும் உரிச்சொல். கையை வகளத்துச் செய்யும் வழிபாட்டுக் குக் குடந்தம் என்னும் பெயர் வந்தது. இது மிகவும் அருமையாக வழங்கும் சொல். - - - 'குடந்தம் பட்டுச் சூழ்போந்து குழைந்து வழுத்தி' என்று கூர்ம புராணக்காரர். இந்தச் சொல்லே ஆளுகிரு.ர். திருவிழாவில் இனிமேல்தான் தேவராட்டி வந்து பூசை செய்யப் போகிருள். அதற்கு முன்ஏற்பாடாக இவை யாவும் கடக்கின்றன. எங்கே பார்த்தாலும் தெய்வத்தை, நினைக்கச் செய்யும் காட்சிகள்: மணம். குறமகள் வருகை முருகனுடைய பூசையை கடத்தும் குறமகள் இதோ: வருகிருள். முருகன் ஆவேச உருவத்தில் வந்து விளையாடு: வதற்கு இடமாகிய பண்புடையவள் அவள், அவளைக்