பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/281

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை 267" கண்டாலே குறிஞ்சி சில மக்களுக்கெல்லாம் ஒரு தனி மதிப்பு. அவள் விரதம் காக்கும் கடுமையைக் கண்டு அவளிடத்தில் யாவரும் அச்சமும் அன்பும் ஒருங்கே கொண்டு பழகுவார்கள். முருகனுடைய திருக்கோயிலுக்கு முன் அவள் வருகிருள். முருகனைத் தன்மீது வருவித்து அருள் காட்டப் போகிருள். ஆடியும் பாடியும் தொழுதும் அழுதும் முருகனை வருவிக்கும் கலையில் வல்லவள் அவள். இந்தப் பெருவிழாவில் எந்தச் சமயத்தில் முருகன் அவள் வாயி' லாக வந்து அருள் புரிவானே என்று எல்லா மக்களும் காத்து கிற்கிருர்கள். தெய்வம் வந்து குடிகொள்ளும் நடமாடும் கோயிலாக அவள் இருக்கிருள். உள்ளே ஒரு சேலையைக் கட்டி அதன் மேலே நிறத்தால் வேறுபட்ட வேறு ஒர் ஆடையை உடுத்திருக்கிருள். நீராடித் தூய்மையுடன் இருக்கும் அவள் தன் கையில் சிவந்த நூலேக் காப்பாகக் கட்டியிருக் கிருள். விரதம் இருப்பவர்கள் கையில் காப்புக் கட்டிக் கொள்வதுண்டு. விழா நடைபெறும்போது முக்கியமான பூசகர் காப்புக கட்டிக்கொள்வதை நாம் பார்த்திருக்கி ருேம். விழாத் தொடங்குவதற்குமுன் இந்தக் காப்புக் கட்டு நடைபெறும். காப்புக் கட்டிக்கொண்டவர்கள் விரதம் காத்து. வேறு எந்தச் செயலிலும் ஈடுபடாமல், குறிப்பிட்ட எல்லேயை விட்டுப் போகாமல் விழா முடியுமளவும் இருப் பார்கள். காப்புக் களையுமட்டும் மிகவும் கடுமையான வரையறைகளோடு விரதம் காப்பார்கள். இந்தக் காலத்தில் மஞ்சட் சரட்டைக் காப்பாகக் கட்டிக்கொள்வதைப் பாக்கிருேம். முருகனுடைய திருவிழாவில் எல்லாம் சிவப்புமயமாக இருக்கிறது.