பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/282

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1268 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகன் செக்கிறமுடையவன். அதனல் அவனுடைய திருவிழாவில் சிவப்புக்கு அதிகச் சிறப்பு இருக்கும் போலும், பூசாரிச்சியாகிய குறமகள் தன் கையில் செக்கிறமுள்ள நூலேயே காப்பாகக் கட்டிக்கொண்டிருக் கிருள். குறமகள் செயல் அவள் கையில் வெண்பொரியை வைத்துக் கொண்டு அதை எங்கும் சிதறிக்கொண்டே வருகிருள். சிறு தெய் வங்கள் பல அவ்விடத்தில் இருப்பதாக அவர்கள் நம்பி ஞர்கள். அவர்களுக்கெல்லாம் சிறைவு உண்டாகும் பொருட்டுப் பொரியைத் தூவுகிருள். பெரிய பனிதரைப் பார்க்கப் போகும்போது அவர் வீட்டு ஏவலாளர்களுக்கு ஏதேனும் சிறிது பணம் தருகிருேம் அல்லவா? அதுபோலக் குறிஞ்சி விலத்தின் தனித் தெய்வமாகிய முருகன் எழுங் தருளப் போகிருன்; அதற்கு முன் அங்குள்ள குட்டித் தெய்வங்களுக்கு கிறைவு உண்டாகப் பொரியைத் துளவு கிருள் குறமகள். அதோடு அரிசியையும் இட்டுப் பூசிக்கிருள். மஞ்சள் கலந்த அட்சதையைக் கொண்டு பூசிக்கும் வழக்கத்தை காம் அறிவோம். இங்கேயோ நல்ல வெள்ளேயான அரிசி யில் சிவப்புக் கலந்து செவ்வரிசியாக்கி அங்கங்கே இடுகிருள். அதைச் சில்பலி அல்லது சிறு பலி என்று சொல்வார்கள். அந்தச் சிவப்பு எதல்ை வருகிறது தெரியுமா? மிக்க பலமுள்ள ஆட்டுக்கிடாய்களே வெட்டிப் பலியிடுகிருர்கள். அவற்றின் இரத்தத்தை அரிசியோடு கலந்து பூசிக்கிருள், பல கூடைகளில் பிரப்பரிசி வைத்து விவேதனம் செய்கிருள். - முரண்கொள் உருவின் இரண்டு உடன்உடீஇச் செந்நூல் யாத்து வெண்பொரி சிதறி