பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/285

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை 271 இவ்வாறு எல்லா ஏற்பாடுகளும் நிறைவேறி விட்டன. இனி முருகனே வா. வா என்று அழைக்க வேண்டியதுதான். எல்லோரும் ஒருமுகமாக முருகனுடைய வருகையை எதிர் பார்த்து ஆவலோடும் பக்தியோடும் காத்திருக்கின்றனர். முருகனே வருவித்தல் அந்த மலேச்சாரலில் பல ஊர்கள் இருக்கின்றன. அங் கிருக்தெல்லாம் மக்கள் திரண்டு வந்திருக்கின்றனர். பலர் தாமும் விரதம் இருந்து இந்த விழாவிலே கலந்துகொள்ள வந்திருக்கிருர்கள் அந்த ஊர்களெல்லாம் வாழவேண்டும், முருகன் திருக் கோயில் வாழவேண்டும் என்று குறமகள் வாழ்த்துகிருள். 'பசி, பிணி, பகை ஆகிய துன்பங்கள் இல்லாமல் ஆண்ட வனே! நீ எல்லோரையும் காப்பாற்ற வேண்டும் என்று வேண்டிக் கொள்கிருள். நல்ல வாசனேயுள்ள தூபத்தை எடுத்துக் காட்டுகிரு.ர்கள். அவள் இப்போது பாடுகிருள். முருகன் குறிஞ்சி கிலத்துக்குத் தெய்வம். அவனுக்கு விருப்பமானது குறிஞ்சிப்பண். அந்தப் பண்ணில் அவள் பாடுகிருள். அவளுடைய பெண் மைக் குரல் தெளிவாகக் கேட்கிறது. மலையில் சலசல என்று அருவி விழுந்துகொண்டே இருக்கிறது. அதன் இனிய ஓசை சுருதி போடுகிறது. ஒம் என்ற ஒசையே அதில் எழுகிறது. வேறு இனிய வாத்தியங் .களைப் பலர் வாசிக்கிருர்கள். கண்ணில் காணும் காட்சி யாவும் முருகனுடைய எண்ணத்தை உண்டாக்குகின்றன காதில் விழும் ஒலிகள் யாவும் அவனுடைய கினேவை எழுப்பு கின்றன. முருகுணர்ச்சி கண் வழியாகவும் காது வழியாக -வும் புகுந்து மனத்தை சிரப்புகிறது. வாசனைப் பண்டங் களாலும் தூபத்தாலும் உண்டான நறுமணமும் ஒரு தெய்விகமான உணர்ச்சியை காசி வழியே ஏற்றுகிறது.