பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/286

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

272 - திருமுருகாற்றுப்படை விளக்கம் அருவியின் ஓங்கார சுருதியும் இன்னியங்களின் இசை முழக்கமும் இணைந்து முழங்கும் அங்கே குறமகள் குறிஞ்சிப் பண்ணேப்பாடுகிருள், அவளுடைய பாட்டு இந்தப் பேரொலி யையும் கிழித்துக் கொண்டு தனியே காதில் விழுகிறது. பாடியபடியே பல வண்ணங்களையுடைய பல பூச்களே அவள் தாவுகிருள். முன்னலே இரத்தத்தோடு கலந்த சிவந்த தினயைப் பரப்பச் செய்திருக்கிருள். முருகனுக்கே உரிய துடியும் தொண்டகமும் ஒலிக்கின்றன. இரத் தக்களரி போன்ற அந்த இடம் பொல்லாதவர்கள் உள்ளத்தில் அச்சத்தை உண்டாக்குகிறது. தூப மணம் கமழ மலர் மணம் விரவ வாத்தியங்கள் ஒலிக்க அக்க இடம் முருகன் வருவதற்கு ஏற்ற, உணர்ச்சி பழுத்த கிலேயமாக இருக்கிறது. துடியும் தொண்டகப் பறையும் இதோ சற்று வேகமாகவும் உரக்கவும் முழங்கு கின்றன. இந்த உச்ச நிலையில் முருகன், 'ஆ' என்று. முழங்கிக் கொண்டு வந்து விடுகிருன்; அந்தக் குறமகள் மேலே ஆவேச உருவத்தில் வந்து ஆடுகிருன். எல்லோரும். இப்போது கன்னத்தில் போட்டுக்கொள்கிருர்கள். கும்பிடு: கிருர்கள். சிலர் அழுகிருர்கள். சிலர் கடுங்குகிருர்கள். சிலர் கீழே விழுந்து வணங்குகிருர்கள். சிலர் உணர்ச்சி விஞ்சி, முருகா! முருகா!' என்று கதறுகிரு.ர்கள். சிலர் கூத்தாடுகிருர்கள், விசையைத் தாண்டி விட்டதுபோல எங்கும் ஒரே தெய்வ உணர்ச்சி: துடிதுடிப்பு: ஆட்ட i-Ո՞ւ-Ը-նն : r - இங்கே சில பேர்வழிகள் வந்திருக்கிருர்கள். அவர் களுக்குச் சாமி, பூதம் இவற்றிலெல்லாம் நம்பிக்கையே. இல்லை. 'ஏதோ பைத்தியக்காரச் செயல்' என்று பூசை