பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/288

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 திருமுருகாற்றுப்படை விளக்கம் முருகனை வருவித்துப் பேச வைக்கும் அற்புதமான இடம் அது. களிமலைச் சிலம்பின் கன்னகர் வாழ்த்தி கறும்புகை எடுத்துக் குறிஞ்சி பாடி இமிழிசை அருவியொடு இன்னியம் கறங்க உருவப் பல்பூத் தூஉய் வெருவாக் குருதிச் செக்தினை பரப்பிக் குறமகள் முருகியம் நிறுத்து முரணினர் உட்க முருகாற்றுப் படுத்த உருகெழு வியனகர்ஆடுகளம் சிலம்பப் பாடிப் பலவுடன் கோடுவாய் வைத்துக் கொடுமணி இயக்கி ஓடாப் பூட்கைப் பிணிமுகம் வாழ்த்தி. (செறிந்த மலை ச்சாரலில் உள்ள கல்ல நகர்களே வாழ்த்தி, மணமுள்ள தூபத்தைக் காட்டி, குறிஞ்சிப் பண்ணைப் பாடி, இனிமையாக ஒலிக்கின்ற ஓசையை யுடைய அருவியோடு இணேந்து இனிய வாத்தியங்கள் முழங்க, பல கிறங்களையுடைய மலர்களே அருச்சித்து, கண்டோர் அஞ்சும்படியாக இரத்தத்தோடு கலந்த சிவந்த தினேயைப் பரப்பி, பூசை செய்யும் குறமகள் முருகனுக்கு உவப்பான வாத்தியங்களே வாசிக்கச் செய்து, தெய்வம் இல்லேடென்ற முரண்பட்ட கொள்கையை உடையவர்களும் அஞ்சும்படியாக முருகனே வரும்படி செய்த அழகுமிக்க அகன்ற திருகோயிலில், வெறியாடுகின்ற இடத்தில் சிலை யோடும்படியாகப் பாடி, பல கொம்புகளே ஒன்ருக ஊதி, ஒலியினல் கொடுமையையுடைய மணிகளே ஒலித்து, போரில் பின்வாங்கி ஓடாத வீரத்தை உடைய பிணிமுகம் என்னும் யானையை வாழ்த்தி- வழிபட, அவ்விடத்தில் முருகன் இருப்பான் என்று சொல்ல வருகிருர். களிமலை-மரங்கள் அடர்ந்து செறிந்த மலை. சிலம்புமலேச்சாரல். ககர்-ஊர்; திருக்கோயில் என்றும் கொள்ள லாம். இமிழ்-இனிதாய் ஒலிக்கின்ற. இன்னியம்-இனிய