பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/289

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

குறமகள் செய்யும் பூசை 275 இசைக் கருவிகள், கறங்க-முழங்க உருவம்-நிறம். து உய்-தூவி. வெருவர-அச்சம் உண்டாகும்படி. குருதி-இரத்தம். முருகு இயம்-முருகனுக்கு உவப்பான வாத்தியங்கள்; துடி, தொண்டகம் முதலிய ன, கிறுத்துஒலிக்கச் செய்து. முரணினர்-மாறுபட்ட எண்ணம் உடையவர்; இங்குள்ள பக்தர்களுக்கு மாறுபட்ட, கடவுள் கம்பிக்கை இல்லாதவர்கள். உட்க-அஞ்ச. முருகு ஆற்றுப் படுத்த-முருகனே வருவித்த. உரு-அழகு. வியனகர்பரந்த கோயில்.) பிணி முகம் என்பதற்கு மயில் என்றும் பொருள் கொள்ளலாம். தூபம் காட்டிக் குறிஞ்சிப் பண்ணைப் பாடி முருகனே வழிபடுதல் பழைய கால வழக்கம். "குறிஞ்சி பாடுமின், நறும்புகை எடுமின்' என்பது சிலப்பதிகாரம். 'ஐயவி சிந்தி நறைபுகைத் தாய்மலர் தூஉய்க் கொய்யாக் குறிஞ்சி பலபாடி’ என்ற புறப்பொருள் வெண்பாமாலைப் பாட்டில் இங்கே கண்ட பல செயல்களைச் சொல்லியிருக்கிருர் ஆசிரியர். இவ்வாறு பூசை போட்டு முருகனே ஆவேச ரூபத்தில் வருவிக்கும் வழக்கம் குறிஞ்சி நிலத்தில் உண்டென்பதை அகநானூற்றிலும் காணலாம் 'களம்நன்கு இழைத்துக் கண்ணி சூட்டி வளநகர் சிலம்பப் பாடிப் பலிகொடுத்து உருவச் செந்தினை குருதியொடு தூஉய் முருகாற்றுப் படுத்த உருகெழு நடுநாள்.”