பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/290

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகனைத் தரிசிக்கும் வழி முருகன் எழுந்தருளிய தலங்களைக் கூறி, அங்கங்கே முனிவரும் தேவரும் பிறரும் வழிபடுவதைக் கூறி, கோயில் கட்டி வழிபடும் இடங்கள் அல்லாத வேறு பல இடங்: களையும் கூறி, கடைசியில் குறமகள் செய்யும் வழி பாட். டையும் கூறி, முருகன் எவ்வாறு எல்லா வகையான மக்க ளாலும் வணங்கப் பெறுகிருன் என்பதைப் புலப்படுத் தினர் நக்கீரர். இடத்திற்கும் சூழ்நிலைக்கும் ஏற்ப மக்கள் வேறுபடுகின்றனர். அவர்களுடைய பழக்க வழக்கங்களும் வேறுபடுகின்றன. வாழ்க்கையின் வளமும் வேறு பட்டிருக் கின்றன. ஆயினும் யாவரும் முருகனேயே தலைவனுக உணர்ந்து வழிபடுகிருர்கள். இவ்வுலக வாழ்க்கையில் எது வேண்டுமோ அதற்காக வழிபடுகிருர்கள். இந்த வாழ்க்கையை வெறுத்து சிற்பவர்களும் அவனுடைய திருவருளே விரும்பி வழிபடுகிருர்கள். முருகன் மலைமேல் இருக்கிருன்; சமவெளியில் இலங்குகிருன். காட்டில் ஒளிர்கிருன்; நாட்டில் திகழ் கிருன், ஆற்றில் இருக்கிருன்; குளத்தில் இருக்கிருன். மனிதர்கள் கூடுகின்ற இடத்தில் இருக்கிருன்; மனித சஞ்சாரமே இல்லாத இடத்திலும் விளங்குகிருன்.. அழகிய மலரிலும் அவன் அருள் ஒளிர்கிறது. அவனை வழிபடுவோர்களில் தான் எத்தனை வேறு பாடுகள்! அழகிய தேவமகளிர் அவனுடைய ஆட்சிக் குரிய குறிஞ்சி நிலத்துக்கு வந்து தம்மை அழகு செய்து கொண்டு அவனே வாழ்த்துகிருர்கள்; போர்க்களத்தில் உணவு பெற்ற பயங்கரமான பேயும் அவனே வாழ்த்து,