பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/291

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகனைத் தரிசிக்கும் வழி 277 கிறது, இந்திராதி தேவர்களும் தம்முடைய குறை முடிய வேண்டுமென்று அவனே வந்து பணிகிருர்கள்; கொலேயே புரி வேடர்களும் அவனைப் பாடிக் கூத்தாடுகிருர்கள். எல்லாம் கற்று உயர்ந்த ஞானியரும் அவனே வணங்கி இன் புறுகிருர்கள் ஒன்றும் அறியாத வேலனும் வழிபட்டு மகிழ் கிருன். முனிவர்கள் போற்றுகின்றனர்; அந்தணுளர் ஏத்துகின்றனர். இவ்வாறு முருகனுடைய பெருமை எங்கும் கிலவுவதைக் கூறினர். வெளிப்படையாக இறைவன் உறையும் இடம் என்று அடையாளங்களால் புலகுைம் தலங்களைக் கூறினர்; அல்லாத ஆறு குளம் முதலிய இடங்களையும் கூறினர். ஐயம் தெளிய இப்படிக் கூறிய பிறகு நக்கீரருக்கு ஒரு சந்தேகம் எழுக் தது. புலவனே முருகனே அடைய வேண்டும் என்ற காத லோடு இருக்கிருன். வள்ளல் ஒருவனே அடைந்து பரிசு பெற வேண்டும் என்ற விருப்பத்தோடு இருக்கும் பரி சிலனைப் போல இந்தப் புலவன் இருக்கிருன். அந்த வள்ளல் இந்த ஊரிலும் இருப்பார்; அந்த ஊரிலும் இருப் பார்: இன்னும் வேறு வேறு இடங்களிலும் இருப்பார்' என்று சொன்னல் புலவனுக்குச் சற்றே மயக்கம் வரலாம். "எப்போதும் சுற்றிக்கொண்டே இருப்பார் போலும்! திட்ட மாக இன்ன இடத்தில் இருப்பார் என்ருல் அங்கே போய்க் காணலாம். பல இடங்களில் இருப்பவரானல் எந்தச் சமயத் தில் எங்கே இருப்பார் என்று தெரியாதே! நாம் ஒரு சமயம் ஓரிடத்துக்குப் போனல், அங்கே அவர் இல்லாமல் வேறு இடத்தில் இருந்தால் என்ன செய்வது? மறுபடியும் அந்த இடத்தை நாடிச் சென்ருல், அதற்குள் மற்ருேர் இடத்தக்குப் போய்விட்டால் எப்படிக் காணுவது' என்ற