பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/292

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

278 திருமுருகாற்றுப்படை விளக்கம் எண்ணம் தோன்றலாம் அல்லவா? அந்த மயக்கத்தைப் போக்க முற்படுகிருர் நக்கீரர். - "நான் சொல்லி வந்தேனே, இந்த இடங்களில் எல்லாம். முருகன் உறைகிருன், அன்போடு அவன் அருளே வேண்டி பிற்கும் அடியவர்கள் எப்படியெல்லாம் தம் கலக்கு ஏற்ற வகையில் வழிபடுவதை விரும்புகிருர்களோ அப்படியெல்லாம் வழிபடுவார்கள். அப்படி வழிபடும் இடங்களிலெல்லாம் அவன் உறைகிருன். இதை நான் அதுபவத்தில் கண்டிருக் கிறேன்’ என்கிருர் . - - வேண்டுநர் வேண்டியாங்கு எய்தினர் வழிபட ஆண்டாண்டு உறைதலும் அறிந்த வாறே. (தன்னை விரும்பும் அன்பர்கள் தாம் விரும்பியபடியே: அடைந்து வணங்க அங்கங்கே உறைவதும் கான் அறிந்த, வண்ணமாகும்.) "இவ்வாறு வழிபட்டவர்கள் தாம் வேண்டியவற்றை. வேண்டியபடியே பெற்று, கன்றியறிவுடன் வழிபட அங் கங்கே எழுந்தருளியிருக்கிருன் என்று பொருள் கூறலாம். முன்னலே வழிபடுகிறவர்களைப் பார்த்துப் பலர் வழி படுகிருர்கள், அந்த வழிபாட்டின் பயனக அவர்கள் எவற்றை விரும்புகிருர்களோ, அவற்றை அடைகிருர்கள். அடைந்த அவர்கள், தம் அநுபவத்தால் வழிபாட்டின் பயனை உணர்ந்து கொண்டவர்களாதலின் மேலும் வழிபடு: கிருர்கள். இதனே கானே அநுபவத்தில் உணர்ந்திருக் கிறேன். ஏதோ பிறர் வாய்மொழியாகக் கேட்டதன்று' என்று உறுதி கூறுவாரைப் போல, "அறிந்தவாறே!' என்கிரு.ர்.