பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/293

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகனைத் தரிசிக்கும் வழி 279 - முருகன் எல்லா இடங்களிலும் எழுந்தருளியிருக்கிருன், அவன் இல்லாத இடம் ஒன்றும் இல்லை. அவன் உறையும் இடம் இதுதான் என்று தனியே சுட்டிக்காட்டிக் கணக்கிட முடியாது. அவன் இல்லாத இடமே இல்லே என்று முடிந்த முடிபாகச் சொல்லி விடலாம். நக்கீரர் அப்படிச் சொல்லாமல், உலகில் உள்ள உபகாரி ஒருவனுடைய விலா சத்தைச் சொல்பவரைப்போலச் சொல்லத் தொடங்கிக் கடைசியில் வேகமாக ஒரு பட்டியலேயே கொடுத்துவிட்டார். ஏன்? மூவகை இடங்கள் முருகனைக் காணவேண்டும் என்ற ஆர்வமுடைய புலவன் இன்னும் பககுவம் முதிர்ந்த கிலே பெறவில்லை. அவனே அடைய வேண்டும் என்ற ஆர்வம் மட்டும் அவனி டம் தலைப்பட்டிருக்கிறது. இன்னது செய்ய வேண்டு மென்று தெரியாமல் இருக்கிருன். அவனுக்கு வழிகாட்ட வந்த நக்கீரர் மனிதனின் மன இயல்பு அறிந்தவராதலின் கயமாக உண்மையைப் படிப்படியாகச் சொல்லுகிருர், முதலில், "நீ இப்போதே நினைத்த காரியத்தில் வெற்றி அடைவாய்' என்று தட்டிக் கொடுத்தார். பிறகு எல்லோ ருக்கும் தெரிந்த திருப்பரங்குன்றம் முதலிய தலங்களைச் சொல்லி முருகனுடைய சிறப்பையும் இணைத்துக் கூறினர். எல்லா மலேகளிலும் இருக்கிருன் என்று பிறகு சொன்னர், கோயில் இல்லாத மலையிலும் அவன் ஆடல் புரிபவன் என்று ஊகிக்கும்படி சொன்னர் முன்னே கூறிய திருப்பரங் குன்றம், திருச்சீரலேவாய், திருவாவினன்குடி. திருவேரகம் என்பவை வெளிப்படையாக முருகன் எழுந்தருளியிருக்கும் கோயில்களையுடைய தலங்கள். பின்னலே கூறிய பல குன்றுகளிலும் சிலவற்றில்தான் முருகனுக்கு கோயில்கள் உள்ளன. பலவற்றில் கோயில் இல்லை. அடையாளமுள்ள