பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/295

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகனைத் தரிசிக்கும் வழி . 281 வருகிறது. ஆனல் பசியுடையவனுக்கு எப்போதுமே உணவின் கினேவுதான் இருக்கும். நாம் தீவிரமான பக்தி உடையவர்கள் அல்ல. ஆதலின் கம் உள்ளத்தில் பக்தியைத் தூண்டுவதற்கு ஏற்ற குழ்கில் இன்றியமையாததாக இருக்கிறது. பக்குவம் முதிர்ந்தவர் களுக்கு எந்த இடத்திலும் எந்தக் காலத்திலும் இறையுணர்வு இருக்கும். எத்தொழிலைச் செய்தாலும் ஏதவத்தைப் பட்டாலும் முத்தர் மனமிருக்கும் மோனத்தே' என்று பெரியோர் கூறுவர். ஆதலின், இருக்கும் சூழ்நிலையின் பலத்தால் கோயில் களில் வழிபட்டு, அங்கே இறைவன் அருளால் அன்பர்கள் கலம் பெறுகிருர்கள். தம்முடைய உள்ளத்தில் உள்ள அன்புச் சிறப்பினல் காட்டிலும் காவிலும் ஆற்றிலும் குளத்திலும் அவனே வழிபடுபவர்களும் அவன் அருளைப் பெறுகிருர்கள். எந்தக் காலத்தில் எந்த இடத்தில் எவ்வாறு வழிபட்டாலும் அங்கே முருகன் எழுந்தருளு கிருன். - 'கான் சொன்ன இடங்களிலும் அல்லாத வேறு இடங்களிலும் அவனேக் காணலாம். எந்த இடமாலுைம் நீ அன்பு முதிர்ந்து, எங்கே காணமுடியும் என்ற உணர்ச்சி பெறுகிருயோ அங்கே அவனை வணங்குவாயாக’ என்று கக்கீரர் கூறுகிருர். மற்றவர்கள் வணங்கும் இடங்களில் ஒரு சூழ்கில் உருவாகியிருக்கிறது. அந்த இடங்களிலெல்லாம் எல்லா ருக்கும் ஒரே மாதிரி உணர்ச்சி உண்டாகாது. சிலருக்குத் திருச்செந்தூரில் மனம் கனிந்து பக்தி உணர்ச்சி மேலிடலாம். சிலருக்குத் திருவாவினன் குடியில் உணர்ச்சி விஞ்சி விற்கலாம். சிலருக்கு ஏதேனும் சிறிய மலைக்கோயிலில்