பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/296

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

282 திருமுருகாற்றுப்படை விளக்கம் இறையுணர்வு எழலாம். வேறு சிலருக்குக் கோயிலே இல்லாத எங்கேனும் அந்த கிலே வரலாம். எந்த இடத்தில் உணர்வு எழுமோ அந்த இடத்தில் மேலும் முயன்று விரும்பி வணங்கி அருளின்பம் பெற வேண்டும். ஆண்டாண்டு ஆயினும் ஆக; காண்தக முந்துநீ கண்டுழி. (கான் கூறிய அவ்வவ்விடங் களானலும், பிற இடங். களானலும் அவனே கினேந்து வழிபடுவதற்குரிய உணர்வைத் தூண்டுவதற்கு ஏற்றதாக முக்தி நீ கண்ட இடத்தில்இன்னவாறு வழிபடுவாயாக என்று சொல்ல வருகிருர்.' உணர்ச்சி கிளர்ந்து எழும்போது முருகனைத் தியானித்துப் பாராட்டினல் நல்ல அநுபவம் கிட்டும். கக்கீரர் இன்ன இடத்தில்தான் முருகனைக் காண முடியும் என்று வரையறை செய்து கூறவில்லை. "உன் மனம் எங்கே நெகிழ்கிறதோ, எந்த இடத்தில் அவனைக் காணற்கு எற்ற இடம் இது என்ற கனிவு உண்டா கிறதோ அங்கே கில். அவனே வணங்க முற்படு' என்று. உபதேசிக்கிருர், "அந்த இடத்தில் உன்னுடைய விருப்பம் முகத்திலே மலர்ச்சியை உண்டாக்கும். அவனே ஏத்துவாயாக கையில்ை தொழுது புகழ்வாயாக. அவன் காலில் விழுந்து வணங்கு' என்கிருர், காண்தக முக்துரீ கண்டுழி முகன்அமர்ந்து ஏத்திக் கைதொழுஉப் பரவிக் காலுற வணங்கி, (காண்பதற்குத் தக்க வண்ணம் முதலில் நீ அநுபவத் தால் உணர்ந்த இடத்தில் முகம் மலரத் துதித்துக் கையால்