பக்கம்:திருமுருகாற்றுப்படை விளக்கம்.pdf/297

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

முருகனைத் தரிசிக்கும் வழி 283, கும்பிட்டு வாழ்த்தித் திருவடிகளில் விழுந்து வணங்கி - ஏத்து வாயாக என்று சொல்ல வருகிருர்.) பிறகு முருகனே வாயாரப் பாடவேண்டும். அவ னுடைய திருநாமங்களைச் சொல்லி உருகவேண்டும். காமங் களைச் சொல்லி இறைவன் திருத்தாளில் பூத்துாவுவதையே அருச்சனே என்று சொல்வார்கள். அருச்சனை செய்வதனல் உள்ளம் குளிர்கிறது: நெகிழ்கிறது. 'அருச்சனை வயலுள் அன்புவித் திட்டுத் தொண்ட உழவர் ஆர’’. என்பது திருவாசகம். தொண்டர்களாகிய உழவர்கள் அருச்சனே என்னும் வயலுக்குள் அன்பு என்னும் விதையை விதைத்துப் பயிர் செய்து சிவபோகத்தை நுகர்கிருர்கள். அன்போடு அருச்சனை செய்தால் எல்லாப் பொறிகளும் ஒரு. முகப்படுகின்றன.